பசு மாடு கடத்தியதாக 2 பேர் காரோடு எரித்துக் கொலை
2 மாதங்களாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகள் கைது
ஜெய்ப்பூர், ஏப். 16- கடந்த பிப்ரவரி மாதம் பசு மாடு கடத்தியதாக 2 பேர் காரோடு எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத் தியது.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் ஹட்மிகா கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜுனைத் (வயது 39), நசீர் (வயது 25).
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 2 பேரும் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி அதிகாலை தங்கள் பொலிரோ காரில் ராஜஸ்தான்-அரியானா எல்லை கிராமத்தில் உள்ள ஜுனைத்தின் உற வினரை சந்திக்க சென் றுள்ளனர்.
அப்போது, அரியானாவை சேர்ந்த பசு பாதுகாப்பு கும்பல் ஜுனைத்தும், நசீரும் காரில் பசு மாட்டை கடத்துவதாக கருதி அவர்களை தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர்.
அரியானாவின் பெரோஷ்பூர் ஹிர்கா பகுதியை சேர்ந்த ரின்கு சைனி என்ற டாக்சி ஓட்டுநர் முதலில் ஜுனைத், நசீர் பயணித்த காரை பின் தொடர்ந் துள்ளார்.
பசு பாதுகாவலர்கள் அமைப்பை சேர்ந்த இவர் பின்னர் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த மொனு மனீசர் என்பவ ருக்கு தகவல் கொடுத் துள்ளார்.
அவர்கள் தங்கள் குழு வினருடன் இணைந்து ஜூனைத், நசீரின் காரை இடைமறித்து இருவ ரையும் கடுமையாக தாக் கியுள்ளனர்.
பின்னர், ஜூனைத் மற்றும் நசீரை காருடன் கடத்திச் சென்ற பசு பாதுகாப்பு கும்பல் இரண்டு பேரையும் உயி ருடன் காருக்குள் வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் இரண்டு பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
அரியானாவின் பர்வாஸ் கிராமத்தில் காட்டுப் பகுதியில் கார் தீக்கிரையான நிலை யிலும், அதனுள் 2 பேர் எரிந்த நிலையில் எலும்புக் கூடாகக் கிடப் பது குறித்தும் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கபட்டது.
தகவலறிந்து நிகழ் விடத்திற்கு வந்த காவல் துறையினர் உடல்களை உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் பூதாகார மான நிலையில், 2 பேரை உயிருடன் எரித்து கொன்றதில் தொடர்பு டையதாக டாக்சி ஓட்டு நர் ரிங்கு சைனி உள்பட சிலரை ராஜஸ்தான் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆனால், இந்த வழக் கில் முக்கிய குற்றவா ளியான மொனு ரானா மற்றும் மொனு ஆகிய 2 பேர் தலைமறைவாகினர்.
இந்த குற்றவாளிகளை பிடிக்க ராஜஸ்தான் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பசுவை கடத்தியதாக 2 பேரை காரோடு எரித்துக் கொன்ற வழக்கில் முக் கிய குற்றவாளிகளான மொனு ரானா மற்றும் மொனுவை ராஜஸ்தான் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
2 மாதங்களாக தலை மறைவாக இருந்த குற்ற வாளிகள் உத்தர காண்ட்டில் பதுங்கி இருந்த போது ராஜஸ் தான் காவல் துறையினர் கைது செய்தனர்.