ஜூலை 4, 5இல் ‘டெட்’ தேர்வு 18ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.15– நாடு முழுவதும் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற வேண்டும் என்றால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த 2009ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது.

அதன் தொடர்ச்சியாக அனைத்து மாநிலங் களிலும் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 2010ஆம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப் பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, 2026ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தகுதியுள்ள நபர்கள் இணையம் மூலம் 18ஆம் தேதி முதல் விண்ணப் பிக்கலாம். ஏப்ரல் 10ஆம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த விண்ணப்பங் களில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ள விரும்புவோர் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் செய்யலாம்.

இதையடுத்து, தகுதித் தேர்வின் தாள் 1- ஜூலை 4ஆம் தேதி காலையிலும், தாள் 2- தேர்வு ஜூலை 5ஆம் தேதி காலையிலும் நடக்கும்.

இந்தத் தேர்வுகள் குறித்த இதர விவரங்கள் மற்றும் கட்டணம் செலுத்தும் விவரங்கள் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளம் http://www.trb.tn.gov.in என்ற இணைய தளத்தில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *