ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்களின் நூலகப் பயணம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஜெயங்கொண்டம், பிப். 15– 12/2/2026 அன்று காலை மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பள்ளியின் தாளாளர் அவர்களின் வழிகாட்டலுடன் பள்ளி முதல்வரால் ஏற்பாடு செய்யப்பட்ட நூலகப் பயணத்தில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் ஜெயங்கொண்டத்தில் அமைந்துள்ள கிளை நூலகத்திற்குச் சென்றனர்.  புத்தகங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன, நூலக ஒழுங்கு, மற்றும் புத்தகங்களை எப்படித் தேடி வாசிப்பது போன்ற முக்கியமான நூலக விதிமுறைகளை நூலகத் தலைவர் அறிமுகப்படுத்தி விளக் கினார். மாணவர்களின் முகங்களில் புத்தகங்களைக் குறித்த ஆர்வமும் சந்தோசமும் வெளிப்பட்டன. அவர்கள் தனக்குத்தானே பிடித்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து ஆர்வமாக படித்தனர்.

மேலும் அனைத்து மாணவர்களும் உறுப்பினராக சேர்ந்து புத்தகங்களை படித்து பயனடையலாம் என்று கூறினார். அதன்படி மாணவர்கள் உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டனர்.

இந்த நூலக பயணம் மாணவர்கள் அறிவைப் பெருக்கும் விதமாக அமைந்தது, எதிர்காலத்தில் அதிகம் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்க்கும்.

முதல்வர் அவர்கள் நூலக பயணம் சென்று வந்த மாணவர்களிடம் “இன்று தலை குனிந்து படித்தால் நாளை தலை நிமிர்ந்து வாழலாம்”.  “இன்று நீ நூலை தேடினால் நாளை உன்னை உலகம் தேடும்”. அறிவை விரிவு செய்யவும் உலகத்தை அறிந்து கொள்ளவும் நூலகம் அவசியம் என்பதை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *