அர்ஜென்டினா சிறுவர் குற்றவாளிகளுக்கான வயது வரம்பு 14 ஆக குறைப்பு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புவெனஸ் அயர்ஸ், பிப்.15– அர்ஜென்டினாவில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களைக் கட்டுப் படுத்த, அந்நாட்டு அரசு மிக முக்கியமான சட்டத் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் நிறைவேற்றப் பட்டது.

நடவடிக்கைக்கான பின்னணி

அதிபர் ஜேவியர் மிலே தலைமையிலான அரசு, நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலை மாற்ற இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க சிறுவர் களைப் பயன்படுத்தி படுகொலை உள்ளிட்ட கொடூரமான குற்றங்களைச் செய்கின்றன.

தண்டனை உறுதி: 14 வயது நிரம்பியவர்கள் செய்யும் கடுமையான குற்றங்களுக்கு அவர்கள் சட்டரீதியாகப் பொறுப் பேற்க வேண்டும் என்பதே இந்த மசோதாவின் நோக்கம்.

இது குறித்துப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் பாட்ரிசியா புல்ரிச், “குற்றக் கும்பல் கள் சிறுவர்களை ஒரு கருவியாகப் பயன் படுத்துவதைத் தடுக்கவும், குற்றங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் இந்தச் சட்டம் அவசியமாகிறது” என்று தெரிவித்தார்.

எதிர்ப்பும் – ஆதரவும்!

இந்த மசோதா தற்போது செனட் சபையின் (மேலவை) இறுதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடையே கலவையான விமர்ச னங்கள் எழுந்துள்ளன:

ஆதரவு: வன்முறையால் பாதிக்கப்பட்ட பொது மக்கள், இது குற்றங்களைக் குறைக்க உதவும் என்று இந்த நடவடிக்கையை வரவேற்கின்றனர்.

எதிர்ப்பு: மனித உரிமை ஆர்வலர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிறுவர்களைச் சிறையில் அடைப்பது அவர்களின் எதிர்காலத்தைச் சிதைத்துவிடும் என்றும், இது தீர்வாகாது என்றும் கூறி அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அர்ஜென்டினாவின் இந்தச் சட்ட மாற்றம் பன்னாட்டு அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *