வினை தீர்ப்பானா விநாயகன்? சென்னை பூக்கடை பகுதியில் அய்ம்பொன் விநாயகர் சிலை திருட்டு

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப். 15– பூக்கடை பகுதியில் உள்ள தனியார் கோயிலில் இருந்த அய்ம்பொன் விநாயகர் சிலை கடந்த 2ஆம் தேதி திருடுபோனது. கோயில் அர்ச்சகர் நித்தியானந்தம் இது தொடர்பாக கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்படி, காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் சிலை திருட்டில் ஈடுபட்டது காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரைச் சேர்ந்த மதிவாணன் (55) என்பதும், இவர்கோயில் அருகே உள்ள கடை ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை காவல் துறையினர் நேற்று முன்தினம் (13.2.2026) கைது செய்தனர். அவரிடமிருந்து சிலை மீட்கப்பட்டது.

 

தமிழிலும் தேர்வு எழுதலாம்;

ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்; கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு

சென்னை, பிப்.15– இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை தமிழிலும் எழுதலாம். மேலும் 10 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும். கூடுதலாக ஒரேயொரு தேர்வு எழுதினால் போதும். எனவே விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 22,195 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 1036 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.03.2026க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

குரூப் டி

காலியிடங்களின் எண்ணிக்கை: 22,195

கல்வித் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு அய்.டி.அய் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 01.01.2026 அன்று 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

ஊதியம்: ரூ.18000 (அடிப்படை ஊதியம்)

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி வழித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும்.

கணினி வழித் தேர்வு: 100 மதிப்பெண்களுக்கு 90 நிமிட கால அளவில் நடைபெறும். இதில் அறிவியலில் 25 கேள்விகளும், கணிதத்தில் 25 கேள்விகளும், திறனறி பகுதியில் 30 கேள்விகளும், பொது அறிவுப் பகுதியில் 20 கேள்விகளும் கேட்கப்படும்.

இந்த கணினி வழித் தேர்வை தமிழிலும் எழுதலாம். தேர்வின்போது தமிழ் மொழியை தேர்வு செய்தால் கேள்விகள் தமிழில் இடம்பெறும். தேவைப்பட்டால் குறிப்பிட்ட கேள்வியை அந்த நேரத்தில் ஆங்கிலத்திலும் பார்க்கலாம். இதனால் 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் எளிதாக இந்த தேர்வை எழுத முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த தேர்வு மே மாதம் பல்வேறு மாற்று நேரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இப்போதே தயாரானால் தேர்வில் நிச்சயமாக வெற்றி பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.03.2026

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ.250.

மகத்தான மனிதநேயம்!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த 10 மாத
பெண் குழந்தையின் உடல் உறுப்புகள் கொடை

திருவனந்தபுரம், பிப்.15– கொச்சியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த 10 மாத பெண் குழந்தையின் உடல் உறுப்புகள் கொடையாக அளிக்கப்பட்டன.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அருண் ஆபிரகாம். இவரது மனைவி ஷெரின். இவர்களுக்கு 10 மாதத்தில் ஆலின் என்ற ஒரு பெண் குழந்தை இருந்தது. கடந்த சில நாள்களுக்கு முன் இவர்கள் 3 பேரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்தில் சிக்கினர்.

இதில் படுகாயமடைந்த 3 பேரும் கொச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை ஆலின் மூளைச்சாவு அடைந்தது. இந்நிலையில் தங்களது மகளின் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதய வால்வு ஆகியவற்றை கொடையாகக் கொடுக்க அருண் ஆபிரகாமும், ஷெரினும் தீர்மானித்தனர்.

இதைத்தொடர்ந்து இந்தக் குழந்தையின் 3 உடல் உறுப்புகளும் திருவனந்தபுரத்தில் உள்ள 2 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஒரு தனியார் மருத்துவமனையில் உள்ள 3 குழந்தைகளுக்கு கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி நேற்று முன்தினம் இரவு (13.2.2026) சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதய வால்வு ஆகியவை ஆம்புலன்ஸ் மூலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. ஆலின் என்ற இந்த 10 மாத குழந்தைதான் கேரளாவில் உடல் உறுப்புகளை கொடையாக அளித்த மிகவும் வயது குறைந்த நன்கொடையாளர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *