ஆவடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்ட தீர்மானங்கள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஆவடி, பிப்.15–  ஆவடி மாவட்ட கழக  கலந்துரையாடல் கூட்டம் 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 06-00 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் திடல் வை.கலையரசன் கடவுள் மறுப்பு கூற, மாவட்ட கழகச் செயலாளர் க.இளவரசன் ஒருங்கிணைப்பில் மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தஞ்சையில் 21.02.2026 சனிக்கிழமை அன்று நடைபெறும் மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை மாநாட்டில் ஆவடி மாவட்ட கழகம் சார்பில் நூற்றுக்கும் அதிகமான தோழர்கள் தனிப்பேருந்து மற்றும் வேன்,மகிழுந்து ஆகியவற்றில் செல்வது

2025 டிசம்பர் 25 அன்று ஆவடி மாவட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் தவிர்க்க முடியாத காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் அந்த கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் ஒப்புதலுடன் 25-02-2026 புதன்கிழமை மாலை ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் வெகு சிறப்பாக நடத்துவதென்றும் அதற்காக கழகத் தோழர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே திட்டமிடப் பட்டிருந்த பெரியார்  உலகத்திற்காக  நிர்ணயிக்கப்பட்ட  நிதியை வழங்குவது.

தஞ்சை மாநாடு, பெரியார் உலகம் குறித்த சுவரெழுத்துப் பிரச்சாரத்தை தீவிரப் படுத்துதல்

மேற்கண்ட தீர்மானங்களை யொட்டி மாவட்டக் கழக துணைத்தலைவர் மு.ரகுபதி, ஆவடி நகர கழக தலைவர் கோ.முருகன், செயலாளர் இ.தமிழ்மணி, மாவட்ட கழக இளைஞரணிச் செயலாளர் சு.வெங்கடேசன், திருமுல்லைவாயல் பகுதி கழகத் தலைவர் இரணியன், பட்டாபிராம் பகுதி கழகத் தலைவர் இரா.வேல்முருகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் க.கார்த்திக்கேயன், துணைத்தலைவர் ஜெயராமன், பெரியார் பெருந்தொண்டர்கள் அம்பத்தூர் அ.வெ.நடராசன், துரை ராவணன், திருநின்றவூர் பகுதி கழக இளைஞரணி அமைப்பாளர் ம.சிலம்பரசன் ஆகியோர் கருத்துகளை தெரிவித்த பின் மாவட்ட தலைவர் நிறைவுரை ஆற்றினார்.

கூட்டத்தில் கழக பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ், மாவட்ட கழகத் தோழர்கள், மகளிரணி மற்றும் இளைஞரணித் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட கழக துணைச்செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *