சேலம்: பத்திரிகையாளர்கள் – த.வெ.க.வினரிடையே தள்ளுமுள்ளு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சேலம், பிப்.15– சேலத்தில் கூட்டத்தில் விஜய்யை பார்க்கச் சென்ற வடமாநில தொழிலாளி உயிரிழந்த நிலையில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனை வாயில் பகுதியில் பத்திரிகையாளர்களுக்கும் தவெகவினருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் 13.2.2026 அன்று சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வட மாநில தொழிலாளி சுராஜி என்பவர் விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே மயக்கமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பின்னர் அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, தவெக சேலம் மாவட்டச் செயலாளர் தமிழன் பார்த்திபன் உயிரிழந்த சுராஜியின் உடலை பார்க்க தனியார் மருத்துவமனைக்கு வந்தார். அவர் வெளியேறியபோது, பத்திரிகையாளர்கள் அவரிடம் பேட்டி எடுக்க முயன்றனர். அப்போது பின்னால் வந்த ஒரு வாகனம் பத்திரிகையாளர்கள் மீது மோதுவது போல் வந்ததால், அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து, “இந்த மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது?” என்று செய்தியாளர்கள் தமிழன் பார்த்திபனிடம் கேள்வி எழுப்ப முயன்றனர். அப்போது காரில் இருந்த தவெக நிர்வாகிகள் இறங்கி வந்து ஒளிப்பதிவாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதட்டமான சூழல் நிலவியது.பின்னர், பத்திரிகையாளர்களைத் தாக்க முயன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, இருதரப்புக்குமிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக தவெக நிர்வாகி ஒருவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *