ஏழைப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
‘பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கு உபயோகமாக இருக்கிறது’ என பூரிப்பு
திருப்பத்தார், பிப்.15– திருப்பத்தார் செல்லும் வழியில் ஏழைப் பெண்ணின் வீட்டுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரிடம் ‘ரூ.5 ஆயி ரம் வந்துச்சாம்மா..’என்று கேட்டறிந்தார். அப்போது, மகளிர் உதவித்தொகை தங்கள் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கு உதவிகரமாக இருக்கிறது’ என அந்தப் பெண் பூரித்தபடி கூறினார்.
ரயில் பயணம்
திருப்பத்தூரில் நேற்று (14.2.2026) நடந்த வடக்கு மண்டல தி.மு.க. பாக முகவர்கள் பயிற்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். மாநாட் டில் கலந்துகொள்வதற்காக அவர் சென்டிரலில் இருந்து ஜோலார்பேட்டைக்கு ரயில் மூலமாக நேற்று காலை சென்றார்.
ஜோலார்ப்பேட்டை ரயில் நிலையத்தில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜோலார்ப்பேட்டையில் இருந்து திருப்பத்தூருக்கு காரில் சென்றார்.
பெண்களின் நன்றி
திருப்பத்தூர் செல்லும் வழியில் தாமலேரிமுத்தூர் என்ற இடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்கள் வரவேற்கக் காத்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும் காரில் இருந்து இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள மக்களை சந்தித்துப் பேசினார்.
அரசின் நல திட்டங்கள் சரியாக வந்து சேருகிறதா? என்று கேட்டறிந்தார். அப்போது மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.5 வரவு வைக்கப்பட்டதற்கும், மகளிர் உரிமைத்தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்ததற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெண்கள் நன்றி தெரிவித்தனர். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்தப் பகுதியில் இருக்கும் தெருக்களில் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
‘ரூ.5 ஆயிரம் வந்துச்சாம்மா…’
அப்போது திடீரென அங்கு வசித்து வரும் மேகலா என்பவரின் வீட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்ததும் ஆச்சரியத்தில் உறைந்து போன மேகலா குடும்பத்தினர் அன்புடன் வரவேற்றனர். வீட்டுக்குள் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘உங்களுக்கு ரூ.5 ஆயிரம் வந்துச்சாம்மா…’ என்று கேட் டார். அதற்கு ‘வந்துச்சுய்யா’ என்று பதிலளித்தார். இப்போது தான் முதன்முறையாக காசு வந்துருக்கா… இல்ல முதலில் இருந்தே காசு கரெக்டா வந்துகிட்டு இருக்கா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்க, ‘ஆரம்பத்துல இருந்தே ரூ.1,000 சரியா வந்துகிட்டு இருக்கு… என் பசங்களோட படிப்புச் செலவுக்கு பயன்படுதய்யா…’ என்று மேகலா பதிலளித்தார்.
பின்னர் மற்ற திட்டங்களெல்லாம் சரியாக வருதா உங்களுக்கு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்க, ‘அதெல்லாம் சரியா வருதுங்கய்யா… ரூ.1,000 சரியா வந்துடுது. பசங்களுக்கு ‘லேப்-டாப்’பும் கிடைச்சிருக்கு… என்று மேகலா பதிலளித்தார்.
மாணவிக்கு அறிவுரை
அரசு சார்பில் இத்தனை நலத்திட்ட உதவிகள் கிடைக்கிறதா உங்களுக்கு என்று பெருமை பொங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்க, அதற்கு, ‘இதற்கு முன்பு இத்தனை சலுகைகள் எங்களுக்கு கிடைச்சதில்ல. உங்க ஆட்சியில்தான் கிடைச்சிருக்கு…’ என்று மகிழ்ச்சி பொங்க மேகலா தெரிவித்தார்.
அதன்பிறகு மேகலாவின் மகள் வணிகவியல் மாணவியான ராஜலட்சுமியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் நலம் விசாரித்தார். நன்றாக படிக்கவேண்டும் என் றும் அறிவுறுத்தினார்.
பின்னர் அங்கு குடிநீர் வாங்கி பருகிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுடன் ஒளிப்படமும் எடுத்து மகிழ்வித்து புறப்பட்டார்.
