சென்னை, ஏப். 16- சிந்து சமவெளி பண் பாட்டுக்கு சொந்தம் கொண்டாடும் உரிமை தமிழுக்கே உள்ளது என்பதை ஆய்வுகள் கூறுகின்றன என்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரு மிதத்துடன் கூறினார்.
சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சார்பில் ஒடிசா மாநில மேனாள் அய்.ஏ.எஸ். அதி காரியும், தமிழியல் இந்தியவியல் ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ் ணன் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று (15.4.2023) நடைபெற்றது.
இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கலந்துகொண்டு நூலை வெளியிட தொழில்துறை அமைச் சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து முதல மைச்சர் பேசியதாவது: சங்க இலக் கியங்களை திராவிட இயக்க மேடை களில் முழங்கியபோது, இதெல் லாம் இலக்கியம்தானே, வரலாறு இல்லையே என்று பலரும் நிராகரித்தார்கள். அந்த சொல்லியல் அனைத்துக்கும் இப்போது தொல் லியல் ஆதாரம் கிடைத் திருக்கிறது. அதைத்தான் பாலகிருஷ்ணன் அளப்பரிய பணியாக செய்து முடித்திருக்கிறார்.சிந்து சமவெளி பண்பாடு என்பது 5 ஆயிரம் ஆண் டுகள் பழமையானது. அப்போது வாழ்ந்த மக்கள் யார், அவர்கள் பேசிய மொழி எது என்பன போன்ற கேள்விகளுக்கான விடையை இந்த நூலில் காணலாம்.
சிந்து பண்பாடு பரவியிருக்கும் குஜராத், மகாராஷ்டிரா, ஆப் கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான் போன்ற இடங்களுக்குப் போய் ஆய்வு செய்து, அங்கு தமிழ்ப் பெயர்கள் இருப்பதை பதிவிட் டுள்ளார். சிந்து சமவெளி பயன் பாட்டுக்கு சொந்தம் கொண்டாடும் உரிமை தமிழுக்கே உள்ளது என் பதை இந்த ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இவ்விழாவில், `இந்து’ என்.ராம், ஒடிசா திறன் மேம்பாட்டு ஆணைய தலைவர் சுப்ரதோ பாக்சி, அரசு முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன், மானுடவியலாளர் பக்தவத்சல பாரதி, சர்மா மரபுக் கல்வி மைய நிறுவனர் சாந்தி பப்பு ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர். நூல் ஆசிரியர் ஆர்.பால கிருஷ்ணன் ஏற்புரையாற்றினார்.
முன்னதாக, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் சுந்தர் கணேசன் வரவேற்றார். நிறைவில், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக பொதுவியல் ஆய்வு மைய ஆய்வாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வன் நன்றி கூறினார்.