திருச்சி, ஏப்.16- அகில இந்திய காங்கரஸ் கட்சி மேனாள் தலைவர் ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போட்டு எம்.பி. பதவியை பறித்த ஒன்றிய பாஜகவினரை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.