முடிமாற்று சிகிச்சைகளை மருத்துவர் அல்லாதார் செய்தால் சட்டப்படி நடவடிக்கை தமிழ்நாடு மருத்துவ குழுமம் எச்சரிக்கை!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப். 14- அண்ணா நகர் பகுதியில் ‘மிஸ்டர் ஹேர்’ என்ற பெயரில் சிகை சீரமைப்பு சிகிச்சை மய்யம் இயங்கி வந்தது. அங்கு, போலி மருத்துவர்கள் மூலம் முடி மாற்று சிகிச்சைகள் மேற்கொள்வது கண்டறியப்பட்டதால், 3 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த சிகிச்சை மய்யத்துக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

படித்த இளைஞர்களும், பெண்களுமே இத்தகைய மோசடி களால் அதிகம் பாதிக்கப்படுவதால், தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) வழிகாட்டுதல்களை மேற்கோள் காட்டி மாநில மருத்துவக் குழு பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

முடி மாற்று சிகிச்சைகள் மற்றும் சரும பொலிவுக்கான ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை கடந்த 2022இல் தேசிய மருத்துவ ஆணையத்தின் நெறிசார் குழு தெளிவாக வெளியிட்டுள்ளது. ஒன்றிய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் சார்பிலும், இத்தகைய சிகிச்சைகளுக்கு குறைந்தபட்ச தரநிலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதனை பின்பற்றி தமிழ்நாடு மருத்துவக் குழுவும் சில அறிவுறுத்தல்களை வெளியிடுகிறது.

நடவடிக்கை

அதன்படி, முடி மாற்று சிகிச்சை மற்றும் லேசர் நுட்பத்திலான தோல் சிகிச்சைகளை மருத்துவ குழுவில் பதிவு செய்த அங்கீரிக்கப் பட்ட மருத்துவர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். மருத்துவ நிறுவனங்கள் பதிவு சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற மய்யங்களில் மட்டுமே அத்தகைய சிகிச்சைகள் வழங்கப்படவேண்டும். உரிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுவது கட்டாயம் ஆகும்.

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ தகுதிகள் இல்லாமல் விதிகளுக்கு புறம்பாக சிகிச்சைகள் வழங்குவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் மற்றும் நிறுவனம் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *