கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* 3 மாத உரிமை தொகை ரூ.3,000, கோடைக்கால தொகுப்பு ரூ.2000 வரவு வைப்பு ரூ.1.31 கோடி மகளிர் வங்கிக்கணக்கில் ரூ.5,000: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* வங்கதேசத்தில் 17 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியை பிடித்த பி.என்.பி. கட்சி:தாரிக் ரஹ்மான் தலைமையில் அமோக வெற்றி.

* தெலங்கானா உள்ளாட்சி தேர்தல் முடிவு: 4 மாநகராட்சி, 65 நகராட்சிகளை காங்கிரஸ் கைப்பற்றியது: 1526 வார்டுகளை கைப்பற்றி காங்கிரஸ் பெரும் வெற்றி; பி.ஆர்.எஸ், பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய பின்னடைவு.

தி இந்து:

* மணிப்பூர் வன்முறை வழக்குகள் குறித்த சிபிஅய் நிலை அறிக்கையை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு. மே 2023 இல் மணிப்பூரை உலுக்கிய மதவெறி வன்முறையின் போது பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு கொடூரமான குற்றங்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு.

* உ.பி.யில் இரு வேறு மத நம்பிக்கையாளரின் திருமணம் நிறுத்தம்: உ.பி. ஹிந்து அமைப்புகளின் போராட்டங்களால் மதக் கலப்பு திருமணம் தடைபட்டது. அகில பாரதிய இந்து சுரக்ஷா சங்கதன் உறுப்பினர்களால் திருமண இடத்திற்கு வெளியே நடத்திய கலவரத்தால், திருமணம் நிறுத்தப்பட்டது.

* ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்த ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தனது பதவி விலகல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.

* அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் விவசாய சங்கத் தலைவர்களை சந்தித்து ராகுல் ஆலோசனை: நாடு தழுவிய இயக்கம் நடத்த திட்டம்

* குழந்தை பராமரிப்பு பெட்டி திட்டம்: மாநிலத்தில் உள்ள 92 சிறப்புப் பிறந்த குழந்தை பராமரிப்பு அலகுகளில் (SNCU) இருந்து வெளியேற்றப்படும் குறைந்த எடை கொண்ட குழந்தைகளுக்கான பராமரிப்பை வலுப்படுத்த தமிழ்நாடு “குழந்தை பராமரிப்பு பெட்டி” திட்டத்தை திராவிட மாடல் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

தி டெலிகிராப்:

* மோடி அரசின் ‘சாந்தி’ மசோதா: – ”சிறீமான் அதானியின் அணுசக்தி தொழில்நுட்ப முன் முயற்சி”க்கு பெயர் தான் சாந்தி. அணுசக்தி துறையிலும் அதானி முன்னேற மோடி அரசு உழைக்கிறது என்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

* மகாராட்டிராவில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, காங்கிரஸ் தாக்கு: சல்மான் கான், ரன்வீர் சிங் மற்றும் ரோஹித் ஷெட்டி போன்ற பாலிவுட் பிரபலங்களை குறிவைத்து தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்களால் விடுக்கப்படுகிறது என்று கூறப்படும்  நிலையில், மும்பை உள்பட மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து உள்ளதாகக் கூறி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மகாராட்டிரா அரசுக்கு எதிராக கடுமையான தாக்குதலைத் தொடுத்தது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

< 2024-2025ஆம் நிதியாண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் மூலமாக ரூ. 3826 கோடியில் பாஜகவுக்கு குவிந்த ரூ.3,157 கோடி (82%), என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *