பி.என்.ஆர். அரங்கநாயகி அம்மா நலம் விசாரிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

உடல் நலம் குன்றியிருக்கும் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்களில் தொடர்ந்து கலந்து கொண்டு சிறப்பிக்கும் மாவட்ட மகளிரணித் தலைவர் பி.என்.ஆர். அரங்கநாயகி அம்மாவை பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, திராவிடர் கழகத் தோழர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் குடும்பத்தினருடனும் கலந்துரையாடி அம்மா உடல் நலன் குறித்து கேட்டறிந்தனர். பி.என்.ஆர். அரங்கநாயகி அம்மாவை தமிழர் தலைவர் ஆசிரியர் தம்மை நேரில் சந்தித்து நலம் விசாரித்தமையை நெகிழ்வுடன் கல்லூரி முதல்வரிடம் கூறி மகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிடர் கழகம்

குமரி மாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதி மற்றும் வடசேரி பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. கழக மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கி வைத்தார். காப்பாளர் ம.தயாளன், துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர், கழக மாவட்ட மேனாள் அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, குமரி நகர செயலர் க.யுவான்சு, தோழர்கள் குமரிச் செல்வன், முத்துவைரவன், ச.ச.தமிழரசன் பங்கேற்றனர். தந்தை பெரியாருடைய கொள்கை நூல்கள், தூண்டறிக்கைகள், கழக தலைவர் கி.வீரமணி அவர்களுடைய நூல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *