வல்லம், பிப். 14- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு சார்பாக மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த இரண்டாமாண்டு இயந்திரவியல் துறை, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, கணினியியல் துறை, கட்டட எழிற்கலை (சான்ட்விச்) துறை, அமைப்பியல் துறை மற்றும் மாடர்ன் ஆபீஸ் பிராக்டீஸ் துறை மாணவ, மாணவிகள் சுமார் 217 பேர் தமிழ்நாடு அரசின் “உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் விலையில்லா மடிக்கணினி கள் வழங்கும் மாபெரும் விழா 11.02.2026 (புதன் கிழமை) அன்று வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலை மையுரை ஆற்றிய போது, தமிழ்ப்புதல்வன், புது மைப்பெண் மற்றும் நான் முதல்வன் ஆகிய திட்டங்களின் வாயிலாக மாணவ, மாணவிகளின் நலனுக்காக நம் தமிழ் நாடு முதல்மைச்சர் வெற்றி கரமாக செயல்படுத்துவதை விளக்கமாக எடுத்துரைத் தனர். மேலும் அரசியலை புரிந்து ஆட்சி அமைப்பை அறிந்து மக்களாட்சியின் மாண்பைக் கடைபிடிக்க வேண்டும் என்று குறிப் பிட்டார்.
விழாவில் முன்னதாக பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் க.ப.வெள்ளியங்கிரி வரவேற்புரை ஆற்றினார். துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது. இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆர்.அய்யநாதன் மற்றும் இயந்திரவியல் துறைத்தலைவர் எல்.விவேக்நிஜந்தன் ஆகியோர் இவ்விழாவை ஒருங்கிணைத்தனர். மடிக்கணினிகள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இக்கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர், முதன்மையர், துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
