திராவிட மாணவர் கழகம் பங்கேற்ற பேரணி – ஆர்ப்பாட்டம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னையில் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில்
ஒன்றிய அரசே! கல்வி நிறுவனப் பாகுபாடுகளைக் களைவதற்கான
யூ.ஜி.சி. விதிமுறைகளைச் செயல்படுத்துக! – உச்சநீதிமன்றமே தடையை நீக்கு! 

சென்னை, பிப்.14  கல்வி நிறுவனப் பாகுபாடுகள் களையப்படுவதற்கு யூ.ஜி.சி.யின் விதிமுறைகளை செயற்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்தியும், உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையினை நீக்கக் கோரியும் சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் நேற்று (13.2.2026) மாலை 4 மணிக்கு மாபெரும் மாணவர் பேரணி  கண்டன முழக்கங்களோடு எழுச்சியோடு தொடங்கியது. அண்ணாசாலை தந்தை பெரியார் சிலை அருகில் (சிம்சன்) பேரணி வந்தடைந்து அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.

திமுக மாணவரணி மாநில செயலாளர் இரா.இராஜிவ்காந்தி தலைமையில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் மிருதுளா தொடக்க உரையாற்றினார். திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆர்ப்பாட்டத்தினை ஒருங்கிணைத்தார்.

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், சமூகநீதி மாணவர் அமைப்பு மாநில பொருளாளர் ஆவடி அஜிஸ், மதிமுக மாணவரணி மாநில செயலாளர் பால் சசிகுமார், முற்போக்கு மாணவர் கழக மாநில பொறுப்பாளர் தயா.நெடுஞ்செழியன்,  ASFI மாநில தலைவர் இப்ராஹிம், காங்கிரஸ் மாணவரணி தலைவர் சின்னதம்பி, மக்கள் நீதி மய்யம் மாணவரணி மாநில செயலாளர் ராகேஷ் ராஜசேகரன், MSF மாநில பொதுச் செயலாளர் நூர் முகம்மது, திராவிட மாணவர் பேரவை துணை செயலாளர் ரேவதி, மாணவர் இந்தியா மாநில தலைவர் சிதம்பரம் பைசல், RSYF மாநில செயற்குழு உறுப்பினர் மணியரசன்  ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் திராவிட மாணவர் கழகம் சார்பில் மாநில இணைச் செயலாளர் மு.இளமாறன், மாநில துணை செயலாளர்கள் செ.பெ.தொண்டறம், தே.நர்மதா, வட சென்னை மாணவர் கழகத் தலைவர் சஞ்சய், நிலவன், பிரசிடென்சி கல்லூரி திராவிட மாணவர் கழகத் தோழர்கள் கயல்விழி, இந்திரா, அண்ணா பல்கலைக் கழகப் பொறுப்பாளர் வெங்கடேஷ் மற்றும் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சுரேஷ், மணிமேகலை, இளைஞரணி பொறுப்பாளர் சென்னகிருஷ்ணன், பாரத் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

‘‘எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மாணவர்களை பாதுகாத்திட வேண்டும்”, “சமத்துவ விதிமுறைக்கு ஸநாதன தடையை ஏற்கமாட்டோம்”, “உயர் கல்வி நிறுவனங்கள் உயர் ஜாதி நிறுவனங்கள் அல்ல; பல்கலைக் கழகங்கள் பார்ப்பன கூடாரங்கள் அல்ல” என்ற மாணவர்களின் முழக்கத்தோடு கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *