தனிநபர் தாக்குதல் ஏற்கத்தக்கதல்ல! பா.ஜ.க. மாநில தலைவரின் பேச்சு கண்டனத்திற்குரியது!

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நடிகர் விஜய் அவர்களின் நேற்றைய (13.2.2026) பேச்சு குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ள முகம் சுளிக்க வைக்கும் கருத்துகள் நாகரிகமானவையல்ல. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் குறித்துப் பேசும்போது அவர்களைத் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதும், தனிநபர் தாக்குதல் நடத்துவதும் ஏற்கத்தக்கதல்ல. அதிலும் பெண்கள்குறித்து அவதூறாகப் பேசுவது கண்டனத்திற்குரியதாகும். ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் என்ற பொறுப்பில் இருப்பவர் இப்படிப் பேசுவது பொதுவாழ்க்கைக்கு இழுக்காகும்.

இதில் கட்சிக் கண்ணோட்டம் நமக்கில்லை. யாராயினும் அது தவறுதான்! அனைவரும் பாடம் கற்பார்களாக!

 கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *