இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழக சிறந்த மாணவர் விருதுகள் (ISTE BEST STUDENT AWARD 2022) பெற்ற வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவர்கள் செல்வன் இன்பான்ட் ராஜ் மற்றும் ஜெரால்டு ரூபன்ராஜ் ஆகியோரை கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பாராட்டினார். இந்நிகழ்வில் இப்பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். (வல்லம், 8.4.2023).