கா… கா… கலகம்! இறைச்சித் துண்டை வீசி இந்து-முஸ்லிம் பதற்றத்தை உருவாக்கிய பாகிஸ்தான் காக்கா???

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் மசூதி உள்ளே கோவில் ஒன்று உள்ளது என்று கூறி ஹிந்துத்துவ அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர்.

அப்போதிருந்தே சம்பல் தலைப்புச் செய்திகளில் அடிக்கடி இடம் பெற்றுவருகிறது,

இந்த நிலையில், 3.2.2026 அன்று காலை சம்பல் நயாபஜார் பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்ற பூசாரி கோவிலின் முன்பு கோழிக்கால் ஒன்று இருப்பதைக் கண்டு உடனடியாக அவ்வூர் பஜ்ரங் தள் அமைப்பினருக்கு தகவல் கொடுத்தார்.

சும்மா விடுவார்களா? உடனடியாக மத வன்முறையைத் தூண்டும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் அச்சாகியது.

இந்த நிலையில் இது தொடர்பாக காவல் துறையினரிடமும் புகார் அளிக்கப்பட்டது. சம்பலில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

காவல் துறையினர் நகர் முழுவதும் குவிந்தனர். இந்த நிலையில் காவல்துறை கோவிலுக்கு முன்பாக வைக்கப்பட்ட கண் காணிப்புக் காமிராவை ஆய்வு செய்தபோது,  ஒரு காக்கா (ஆமாங்க, சாதாரண காக்கா தான்!) வாயில் கோழிக்காலோடு பறந்து வந்து அங்கிருந்த மின்சார வயரில் அமர்ந்தது. நிதானமாக அந்த ‘லெக் பீஸை’ கொத்தித் தின்ன முயன்ற போது, கைநழுவி (சாரி, வாய் நழுவி) கோழிக்கால் கோவில் வாசலில் விழுந்தது. காக்காவும், “ச்சே… இன்னைக்கு நமக்கு லெக் பீஸ் குடுத்து வைக்கல” என்று அந்தக் காகமும் இந்தக்கால் போனால் போகிறது வேறு காலைப் பார்க்கலாம் என்று கிளம்பிவிட்டது போலும்

இதனை அடுத்து ‘நிகழ்வு தற்செயலானது’ என்று அறிந்துகொண்ட காவல்துறையினர் ஹிந்துத்துவ அமைப்பினரையும் பஜ்ரங் தள் மற்றும் கோவில் நிர்வாகிகளையும் அழைத்து நிகழ்வை காண்பித்து, “இதோ அந்தக் காக்காதான் சதிகாரன். விரைவில் அந்தக் காக்காவைப் பிடிக்க முயற்சிப்போம். இதில் சதிச்செயல் ஒன்றும் இல்லை” என்று கூறி அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டனர்.

ஆனால் இந்த நிகழ்வு நடந்துகொண்டு இருக்கும் போதே பஜ்ரங் தள் அமைப்பினர் கைப்பிரதிகளை நகரில் பல பகுதிகளில் விநியோகித்துவிட்டனர்.   காவல்துறையின் ஆலோசனைக்குப் பிறகு வெளியே வந்த சில ஹிந்துத்துவ அமைப்பினர் இது பாகிஸ்தானில் இருந்துவந்த காக்காவாக இருக்கும் என்று கூறிக்கொண்டே சென்றனர்.

அதற்குள் டில்லி செய்தியாளர்கள் காமிரா சகிதம் சம்பல் நோக்கி புறப்பட்டுவிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *