தஞ்சை, பிப். 13- பிப்ரவரி21 தஞ்சையில் நடைபெறும் திரா விடர் கழக மகளிர் அணி-திராவிட மகளிர் பாசறை-கழக இளைஞரணி -திராவிடர் மாணவர் கழக மாநில மாநாடு-பேரணி ஏற்பாட்டுப் பணிகளை 8.2.2026 அன்று மாலை 4 மணிக்கு மாநாடு நடைபெறும் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம் மற்றும் திலகர் திடல், ஊர்வலம் நடைபெறும் பாதை ஆகியவற்றை பார்வையிட்டு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆய்வு செய்து கழக பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட காப்பாளர் மு. அய்யனார், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, திராவிடர் கழக கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இராசெந்தூரப்பாண்டியன், தஞ்சை மாநகர தலைவர் செ.தமிழ்ச் செல்வன், தஞ்சை மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல் பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பாவலர்.பொன்னரசு பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் ஜெ.பெரியார் கண்ணன், தஞ்சை மாநகர துணைத் தலைவர் அ.டேவிட், திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், தஞ்சை புதிய பேருந்து நிலையப் பகுதி தலைவர் சாமி.கலைச்செல்வன், செயலாளர் வெ.துரை, தஞ்சை மாநகர பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவுதாசன், கீழவாசல் பகுதி செயலாளர் பழக்கடை கணேசன், இபி காலனி பகுதி செயலாளர் இரா.பரந்தாமன், பகுத்தறிவாளர்கழக பொறுப்பாளர் ஏழுமலை, பேராசிரியர் இளங்கோ ஆகியோர் பங்கேற்று மாநாட்டுப் பணிகள் குறித்து திட்டமிட்டனர்.
