இந்நாள் – அந்நாள் உயிரினக் கோட்பாட்டாளர் சார்லஸ் டார்வின் பிறந்த நாள் இன்று (12.2.1809)

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கடவுள் படைக்கவில்லை’ என நிரூபித்து உயிரினக் கோட்பாட்டை சான்றுகளோடு உலகிற்கு தெரிவித்தவர் சார்லஸ் டார்வின் ஆவார்.

சார்லஸ் ராபர்ட் டார்வின் இங்கிலாந்தில் உள்ள ‘ஷ்ரூஸ்பரி’ என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை மற்றும் தாத்தா ஆகிய இருவரும் மருத்துவர்கள். டார்வினும் முதலில் மருத்துவம் பயிலவே சேர்ந்தார்,  ஆனால் அவருக்கு அறிவியல் ஆய்வுகளில் ஆர்வம் இருந்ததால் அவர் தன்னுடைய பாதையை மாற்றிக் கொண்டார்.

தமது 22-ஆவது வயதில், எச்.எம்.எஸ். பீகிள் (HMS Beagle) என்ற கப்பலில் இயற்கை ஆய்வாளராகப் பயணிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

லண்டனில் இருந்து புறப்பட்ட இந்தக் கப்பலில்  இரண்டு ஆண்டுகள்  மட்டுமே ஆய்வு என்று தொடங் கப்பட்ட இந்தப் பயணம், அய்ந்து ஆண்டுகள் வரை நீடித்தது.

தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகளைச் சுற்றி இந்தக் கப்பல் வலம் வந்தது.

கலாபகஸ் தீவுகள் – இங்குதான் டார்வின் தனது மிக முக்கியமான அவதானிப்புகளைச் செய்தார். அங்குள்ள குருவிகள்  மற்றும் ஆமைகள் ஒரே இனத்தைச் சேர்ந்த வையாக இருந்தாலும், அவை வாழும் சூழலுக்கு ஏற்ப அவற்றின் உடல் அமைப்பில் (குறிப்பாக குருவிகளின் அலகு) மாற்றங்கள் இருப்பதைக் கவனித்தார்.

இந்தப் பயணத்தின் போது சேகரித்த மாதிரிகள் மற்றும் தரவுகளைக் கொண்டு டார்வின் தனது ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கையை’ உருவாக்கினார். 1859-இல் “உயிரினங்களின் தோற்றம்” (On the Origin of Species) என்ற தனது நூலை வெளியிட்டார்.

அதன் முக்கியக் கருத்துக்கள்

வளங்கள் குறைவாக இருப்பதால், உயிரினங் களுக்கு இடையே உயிர்வாழப் போராட்டம் நிலவுகிறது. சூழலுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்ளும் தகுதியுள்ள உயிரினங்கள் மட்டுமே உயிர் பிழைக்கும்.

பொதுவான மூதாதையர்

அனைத்து உயிரினங்களும் ஒரு பொதுவான மூதாதையரிடமிருந்து படிப்படியாக உருமாற்றம் அடைந்து தோன்றியவை. மனிதர்களும் குரங்கு போன்ற மூதாதையரிடமிருந்தே பரிணாமம் அடைந்தனர்.

டார்வினின் கண்டுபிடிப்புகள் அன்று நிலவிய பல மத ரீதியான நம்பிக்கைகளை உடைத்தன. எதையும் தரவுகளுடன் விளக்கினார். இதனால் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தாலும், இன்று நவீன உயிரியலின்  அடித்தளமாக இவரது கொள்கைகளே விளங்குகின்றன. ஆண்டுதோறும் பிப்ரவரி 12-ஆம் தேதியை உலகம் முழுவதும் ‘டார்வின் தினமாக’ கொண்டாடி வருகின்றனர்.

சார்லஸ் டார்வினின் 217ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (12.2.2026).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *