வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அரிய நிகழ்வு பிப்ரவரி 28இல் கண்டு மகிழலாம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அரிய நிகழ்வை, பிப்.28ஆம் தேதி பொதுமக்கள் கண்டு மகிழலாம் என்று வானிலை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் சூரியனைச் சுற்றி வருகின்றன.  இதில் பூமி ஒரு முறை சூரியனை சுற்றிவர 365 நாட்களாகின்றன.

கோள்களின் சுற்று வட்டப் பாதையில் ஒன்றை ஒன்று சந்திக்கும் அபூர்வ நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்வதுண்டு. அதன்படி, 6 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து வரும் அரிய நிகழ்வானது கடந்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடந்தது.

அதேபோல் இந்த ஆண்டும் 2 முறை ஒரே நேர்க்கோட்டில் சில கோள்கள் வரவுள்ளன. அதன்படி, வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய 6 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் பிப்.28ஆம் தேதி தென்பட உள்ளன. இதில் வெறும் கண்களால் வெள்ளி, வியாழன், சனி மற்றும் செவ்வாய் கோள்களைப் பார்க்கலாம். நெப்டியூன் மற்றும் யுரேனஸை மிகவும் சக்திவாய்ந்த தொலைநோக்கிகளால் மட்டுமே காண முடியும்.

இவற்றைக் காண்பதற்காக அறிவியல் அமைப்புகள் சார்பில் நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன . இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறும்போது, ‘‘கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வரவில்லை.  பூமியில் இருந்து பார்க்கும் போது இந்தக் கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போல ஒரு விந்தையான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

இதில் வெள்ளி, வியாழன், சனி மற்றும் செவ்வாய் கோள்களை வீட்டின் மாடியில், மைதானங்கள் அல்லது கடற்கரையில் இருந்தே பார்க்கலாம். செவ்வாய் கோள் இரவு 9 மணியளவில்தான் உதயமாகும். கோள்களைத் தனித்தனியாகவும் பார்க்கலாம்.

அதேநேரம், யுரேனஸ் மற்றும் நெப்டியூனை சக்திவாய்ந்த தொலைநோக்கியால் மூலமே பார்க்க முடியும். எனினும், அவற்றைக் கண்டறிவது சற்று கடினம். இதுபோன்ற 5 அல்லது 6 கோள்களின் அணிவகுப்பு மீண்டும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதியும் நடைபெறும்’’ என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *