டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. திமுக, காங்கிரஸ் கூட்டணியை பிரிக்க சிலர் முயற்சிக்கின்றனர். இரு கட்சிகளும் இணைந்து தான் தேர்தலை சந்திக்கும், இந்தியா டுடே நிகழ்ச்சியில் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
* தமிழ்நாடு அணியா? டில்லி அணியா? என்பதை முடிவு செய்யப் போவதுதான் இந்தத் தேர்தல்” என திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டலப் பயிற்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* “அமெரிக்க வர்த்தக வரி அழுத்தத்துக்கு பணிந்து விட்டது இந்தியா; டேட்டா கட்டுப்பாட்டை விட்டுக் கொடுத்தது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
தி இந்து:
* குறைந்த தனிநபர் வருமானம், வளர்ந்து வரும் சமத்துவமின்மை மற்றும் வேலையின்மை குறித்து ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் எந்த தீர்வும் இல்லை; “பயம் மற்றும் வெறுப்பு நிறைந்த சூழலில் எந்த பொருளாதாரமும் வளர முடியாது” என்று காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று சாடல்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* தேசிய மருத்துவ ஆணையத்தில் 19 காலியிடங்கள் நாட்டின் உச்ச மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை நிறுவனமான தேசிய மருத்துவ ஆணையத்தில் (NMC) கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பணியிடங்கள் காலியாக இருப்பதாக பிப்ரவரி 10, 2026 அன்று ஒன்றிய அரசு ராஜ்யசபாவில் தெரிவித்தது.
*எய்ம்ஸ் முழுவதும் 3இல் 1 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன; 17,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. நாட்டின் முதன்மை நிறுவனமான எய்ம்ஸ் புதுடில்லியில், அனுமதிக்கப்பட்ட 1,306 ஆசிரியர் பணியிடங்களில் 446 காலியாக உள்ளன. ஜோத்பூரில் 184, மங்களகிரி 138, நாக்பூரில் 135, கல்யாணி 134 மற்றும் ரிஷிகேஷ் 126 காலியிடங்கள் உள்ளன.
* சிஏபிஎஃப், அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் 93,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள்: அய்ந்து மத்திய ஆயுதப்படைகள் (சிஏபிஎஃப்) மற்றும் அசாம் ரைபிள்ஸில் 93,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள், அவற்றின் ஒருங்கிணைந்த அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் சுமார் 8.7%, ஜனவரி 1, 2026 நிலவரப்படி காலியாக இருப்பதாக உள்துறை அமைச்சகம் பு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
– குடந்தை கருணா
