ஸ்டெர்லைட் ஆலை வழக்கு! ஒன்றிய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவு!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப். 12- ஸ்டெர்லைட் ஆலையில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி மறுத்ததை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார கிராமத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர், நிலம் மற்றும் காற்று மாசடைவதாகக் கூறி அந்த ஆலையை மூட தமிழ்நாடு அரசு கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் பசுமைத் தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் கடந்த ஜன.9 அன்று தமிழ்நாடு அரசுக்கு விண்ணப்பித்தது. இந்த விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு கடந்த ஜன.27 அன்று நிராகரித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்குள் பசுமைத் தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி மறுத்து தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்து, நீதிமன்ற கண்காணிப்பில் ஒன்றிய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், ஒன்றிய சுற்றுச்சூழல் துறை, ஒன்றிய சுரங்கத் துறையின் அதிகாரிகள், நிபுணர்கள் அடங்கிய பன்னோக்கு குழுவை அமைத்து பசுமைத் தாமிரம் உற்பத்தி ஆலை அமைப்பது குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனக் கோரியிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.சிறீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சதீஷ் பராசரன், விண்ணப்பத்தை நிராகரிக்கும் முன்பாக விளக்கமளிக்க அவகாசம் வழங்காததும் விதிகளுக்கு புறம்பானது. எனவே தூத்துக்குடியில் பசுமைத் தாமிர உற்பத்தி ஆலை அமைப்பது குறித்து ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஒன்றிய சுற்றுச்சூழல் துறை, கனிம வளத்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்றார்.

நீதிபதிகள் உத்தரவு

தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ஏற்கெனவே தமிழ்நாடு அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து, அதை புதுப்பிக்கும் நோக்கத்தில் ‘பசுமைத் தாமிரம்’ என மாற்று திட்டத்தை கையில் மனுதாரர் எடுத்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர், நிலம், காற்று என அனைத்தும் பாழாகிவிட்டது. புதிய மொந்தையில் பழைய கள் என்பது போல வேதாந்தா நிறுவனம் மீண்டும் தனது அஸ்திரத்தை ஏவி வருகிறது என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, விதிகளின்படி விளக்கமளிக்க அவகாசம் வழங்கவில்லை என வேதாந்தா நிறுவனம் கூறுவதால் தொழில்நுட்ப ரீதியாக விளக்கமளிக்க அவகாசம் வழங்கலாமே என்றார். இதுதொடர்பாக அரசின் கருத்தை அறிந்து தான் பதிலளிக்க முடியும் என கூடுதல் தலைமை வழக்குரைஞர் தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘பசுமை தாமிர ஆலைக்கான சாத்தியக் கூறுகளை ஆராய நிபுணர்கள் குழுவை அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை பிப்.26-க்கு தள்ளி வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *