அறிவியல் துணுக்குகள்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அதி நவீன செமிகண்டக்டர் சில்லுகளை நூலிழை களுக்குள் புகுத்தி ‘ஸ்மார்ட் இழைகளை’ உருவாக்கி யுள்ளனர். இவற்றை சாதாரண ஆடை களில் வைத்து நெய்ய முடியும். இதை அணிபவரின் உடல் நலத் தரவுகளை இழைகள் சேகரிக்கும்.

லண்டன் இம்பீரியல் கல்லூரி பொறியாளர்கள் 200 டிகிரி சென்டி கிரேடு வெப்பத்திலும் உருகாத தீயணைப்பு டிரோன் ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஏரோஜெல் கவசத்தால் பாதுகாக்கப்பட்ட இந்த டிரோன், எரியும் கட்டடங்களுக்குள் புகுந்து மனித உயிர்களைக் காக்க உதவும். தீயணைப்பு வீரர்களின் உயிருக்கு ஆபத்தில்லாமல் தகவல்களைத் திரட் டவும் உதவும்.

வெர்வ் தெர பியூட்டிக்சின் ஆய்வாளர்கள், ‘கிரிஸ்பர்’ தொழில்நுட்பம் வாயிலாக, ஒருமுறை செய்யப்படும் சிகிச்சையிலேயே, கொலஸ்ட்ராலை நிரந்தரமாகக் குறைக்க வழிவகுத்துள்ளனர். ‘பி.சி.எஸ்.கே.9’ என்ற மரபணுவை மாற்றியமைக்கும் இந்த முறை, இதய மருத்துவப் பயனாளிகள் வாழ்நாள் முழுதும் மாத்திரை சாப்பிடும் அவசியத்தை நீக்கும்.

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மர வளையங்களை கார்பன்-14 சோதனை செய்து, ஆதிகாலத்தில் எப்போதெல்லாம் சூரியப் புயல்கள் வீசின என்பதை கண்டறிந்துள்ளனர். கார்போ ஹைட்ரேட் படிமங்களால் ஏற்படும் காலதாமதத்தைச் சீரமைப்பதன் வாயிலாக, வரலாற்றின் மிக மோசமான சூரியச் சீற்றங்களை துல்லியமாகப் பட்டியலிட்டுள்ளனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஏ.அய்.யின் உதவியுடன், சிங்கங்கள் பயன்படுத்தும் இரண்டாம் வகை ரகசியக் கர்ஜனையைக் கண்டறிந்துள்ளனர். மனிதக் காதுகளுக்குப் புலப்படாத இச்சத்தங்கள், சிங்கங்களின் சமூகக் கட்டமைப்பு மற்றும் ஆரோக்கியத்தை தூரத்திலிருந்தே துல்லியமாகக் கண்காணிக்க வனக்காப்பாளர்களுக்கு உதவும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *