‘நல்ல வீடு என்பதற்கு அடையாளமே நூலகம்தான்’ – ‘‘கவின் – காவியா’’ புதிய இல்ல அறிமுக விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்!

7 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெரியாரைப் பார்க்காத ஒரு தலைமுறை, பெரியாருடைய கொள்கையை ஏற்றது மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க அந்தக் கொள்கையைப் பரப்புவதற்குரிய பணியை மேற்கொள்ளக்கூடிய பக்குவத்தைப் பெற்றிருக்கின்றனர்!
‘திராவிடம்’ என்பது ஆயிரங்காலத்துப் பயிர்! இதை எந்தக் கொம்பனாலும் அசைத்துவிட முடியாது!

தஞ்சை, பிப்.12 ஜெயக்குமார் அவர்கள், பெரியாரைப் பார்த்ததில்லை. பெரியாரைப் பார்க்காத ஒரு தலை முறை, பெரியாருடைய கொள்கையை ஏற்றது மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க அந்தக் கொள்கையைப் பரப்புவதற்குரிய பணியை மேற்கொள்ளக்கூடிய பக்கு வத்தைப் பெற்றிருக்கின்றனர் என்றால், ‘திராவிடம்’ என்பது ஆயிரங்காலத்துப் பயிர்! இதை எந்தக் கொம்பனாலும் அசைத்துவிட முடியாது. நல்ல வீடு என்பதற்கு அடையாளமே நூலகம்தான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘கவின் – காவியா’’ புதிய இல்ல
அறிமுக விழா!

கடந்த 7.2.2026 அன்று தஞ்சை மாதாக்கோட்டை, அடைக்கல மாதா நகரில், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் – ஜெகதாராணி (பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், வல்லம்) இணையரின்  புதிதாகக் கட்டப்பட்ட கவுல்சயா நினைவு ‘‘கவின் – காவியா’’ புதிய இல்ல அறிமுகத்தை, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிமுகப்படுத்தி, வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

கொள்கை வீரர்களையெல்லாம் இந்தப் பகுதி தந்திருக்கிறது என்பதற்கு ஒரு நீண்ட பட்டியலையே தர முடியும் என்று சொன்னாலும், ஜெயக்குமார் அவர்க ளுடைய உழைப்பைப்பற்றி இங்கே சொன்னார்கள்.

ரகசியம் இல்லாத ஓர் இயக்கம்
திராவிடர் கழகம்!

அதைவிட, ரகசியம் இல்லாத ஓர் இயக்கம் திராவிடர் கழகம். எதையும் மறைத்துப் பேசத் தெரியாத இயக்கம் திராவிடர் கழகம், தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கம்.

காரணம், தந்தை பெரியார் அவர்கள், ரகசியம் என்ற ஒன்றை வைத்துக் கொண்டதே கிடையாது. அவர்கள் மறைத்துப் பேசியதும் கிடையாது. மனதில் என்ன  இருக்கிறதோ, அந்தக் கருத்தை வெளிப்படையாகப் பேசுவதுதான் அவருடைய வாடிக்கை. அவருடைய தொண்டர்கள் நாங்கள், அவருடைய வாழ்நாள் தொண்டர்கள், வாழ்நாள் மாணவர்கள். அதே பணியை செய்யக்கூடிய வகையில் வரும்போது, இந்த இல்லத்திற்கு முழு உரிமையாளர் என்று சொன்னால், ஜெகதாராணிதான். இதனால், அவர்கள் இரண்டு பேருக்குமிடையே சண்டை வராது.

ஊதியத்திற்காக கழகப் பணியை செய்யவில்லை!

ஏனென்று சொன்னால், இங்கே வெளிப்படை யாகச் சொன்னார்கள். ஜெயக்குமார் அவர்கள், ஊதியத்திற்காக கழகப் பணியை செய்யவில்லை. 24 மணிநேரமும் கழகப் பணியாற்றுகிறார்.

பல தோழர்கள் என்னை உற்சாகப்படுத்துவதற்காக, ‘‘இவருக்கு 93 வயது’’ என்று அடிக்கடி ஞாபகப்படுத்து கிறார்கள். அதை நான் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதில்லை.

தந்தை பெரியாரிடம் நாங்கள் கற்றுக்கொண்டோம்!

நேரம், காலம் பார்க்காமல் உழைக்கக்கூடிய அளவில் இருக்கின்றோம். நேற்று காலையில் ஓர் ஊர்; மதியம் இன்னொரு ஊர்; மாலையில் மற்றொரு ஊர். இது வழமைதான், இது ஒன்றும் புதிது அல்ல. இப்படித்தான் தந்தை பெரியார் அவர்கள் பணியாற்றுவார். இப்படி பணியாற்றுவதை, தந்தை பெரியார் அவர்களிடம் நாங்கள் கற்றுக்கொண்டு, அந்தப் பணியைச் செய்கின்றோம்.

அதற்கு அடிப்படைக் காரணம் என்னவென்றால், நான் மட்டுமல்ல; நான் ஒரு பங்கு. ஆனால், அதனுடைய முழு பங்கு யார் என்று சொன்னால், என்னுடன் இருக்கக்கூடிய தோழர்கள் ஜெயக்குமார் ஆனாலும், என்னுடைய ஓட்டுநர் ஆனாலும், என்னோடு பழகக்கூடியவர்கள் ஆனாலும், குணசேகரனாலும் அவர்களுக்குத்தான் முழுப் பங்களிப்பு உண்டு.

மக்களுக்கே திருப்பிக் கொடுத்தார்
தந்தை பெரியார்!

நாங்கள் யாரும், இயக்கத்தில் ஊதியம் வாங்கிக் கொண்டு பணியாற்றவில்லை. வருவாய்க்காக பணி யாற்றக் கூடியவர்கள் அல்ல. ஏனென்றால், தந்தை பெரியார் அவர்கள், வருவாய்க்காக பொதுவாழ்க்கையில் இல்லை. ஆனால், தந்தை பெரியாருக்கு ஏராளமாகக் கொடுத்தார்கள். அவை அத்தனையையும் மக்களுக்கே திருப்பிக் கொடுத்தார் என்ற பெருமை என்றைக்கும் அவருக்கு உண்டு.

எங்கள் பல்கலைக் கழகத்தில் பணியாற்றக்கூடியவர் நம்முடைய ஜெயதா ராணி அவர்கள். நாங்கள் அங்கே செல்லும்போது, எப்பொழுதாவது ஒருமுறைதான் அவரைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அவரு டைய பணியைப் பார்த்துக் கொண்டிருப்பார். அந்தப் பணியில் கிடைக்கக்கூடிய ஊதியத்தை வைத்து இந்த இல்லத்தைக் கட்டியிருக்கிறார். அத்துடன், அவருடைய உறவுக்காரர்கள், சகோதரர்களின் ஒத்துழைப்பும் இருக்கக்கூடும்.

ஏனென்றால், பொதுவாழ்க்கைக்கு வரக்கூடியவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று இலக்கணம் வகுத் தார்களோ, அந்த இலக்கணத்தின்படி நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதை அவர் சொல்லும்போது, கூச்சமோ, சங்கடமோ கிடையாது. ஏனென்றால், என்னு டைய வாழ்க்கையும் அப்படித்தான். எனக்கு  தோழர் அவர். என்னிடத்தில் நெருங்கி இருக்கக் கூடியவர்கள்.

எனக்கு சொந்தமாக வீடு கிடையாது,
எனக்கு வசதி, வாய்ப்புகள் கிடையாது!

ஒரு தகவலை இங்கே சொல்கிறேன். ஓர் அவதூறு வழக்கின்போது, அந்த வழக்கு விசாரணையின்போது, ஒருவர் என்னை குறுக்கு விசாரணை செய்தார். அப்போது அவர் என்னிடம், ‘‘நீங்கள், உங்கள் மாமனார், மாமியார் வீட்டில்தானே வசிக்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.

‘‘ஆமாம், அதிலொன்றும் சந்தேகமேயில்லை. எனக்கு சொந்தமாக வீடு கிடையாது, எனக்கு வசதி, வாய்ப்புகள் கிடையாது. ஆகவே, என்னுடைய மாமனார், மாமியார் வீட்டில்தான் வசிக்கிறேன்’’ என்றேன்.

அடுத்த நாள் ஒரு நாளிதழ் எட்டுக் காலத்தில் தலைப்பிட்டுச் செய்தியை வெளியிட்டது – ‘‘நான் மாமனார் வீட்டில்தான் இருக்கிறேன்’’ என்று.

அதைப் பார்த்த சில நண்பர்கள், ‘‘என்னங்க, இப்படியெல்லாம் செய்தி போடுகிறார்கள்?’’ என்றார்கள்.

உண்மையைச் சொல்வதில்
என்ன தவறு இருக்கிறது?

நான் சொன்னேன், ‘‘இதில் சங்கடப்படுவதற்கு என்ன இருக்கிறது? உண்மையைச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கென்று வசதி வாய்ப்பு கிடையாது என்ற முறையில்தான், அய்யா அவர்கள் அந்த ஏற்பாட்டைச் செய்தார்கள்’’ என்றேன்.

என்னுடைய வாழ்விணையர் அவர்கள்கூட, நான் அவரிடத்தில் பணம் கேட்பதற்குச் சங்கடப்படுவேனோ என்று நினைத்து, நான் சட்டையைக் கழற்றி மாட்டி வைத்திருந்தால், அந்தச் சட்டைப் பாக்கெட்டில் பணத்தை வைத்துவிடுவார்.

நான் வெளியில் சென்றவுடன்தான், என்னுடைய சட்டைப் பாக்கெட்டில் பணம் இருப்பது தெரியும். நான், அவரிடம் பணம் கேட்டது கிடையாது. ஆனால், மொத்தமாக என்னிடம் பணம் கொடுத்து வைப்பார். சில நேரத்தில், அவருக்குப் பணம் தேவைப்படும்போது, ‘‘கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது, கொடுங்கள்’’ என்று கேட்பார்.

‘‘நேற்று முன்தினம்தானே பணம் கொடுத்தீர்கள்; பிறகு ஏன் மறுபடியும் பணம் கேட்கிறீர்கள்?’’ என்று கேட்பேன்.

நான், அந்தப் பணத்திற்கு உரிமையாளன் அல்ல. ஆனாலும், பெரியாரிடமிருந்து கற்றுக்கொண்ட பழக்கம் அது. எதற்கும் கணக்குக் கேட்கவேண்டும் என்பது.

ஜெயக்குமாருக்கு இருக்கின்ற
மிகப்பெரிய ஊதியம்

வாழ்க்கை இணை என்று வருகின்ற நேரத்தில், அந்தத

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண