‘இந்தியா டுடே’விற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி!

5 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெரியாருடைய கொள்கை + அண்ணாவுடைய இலட்சியம் + கலைஞருடைய பாதை = ‘திராவிட மாடல்’ ஆட்சி!

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக உள்ளது!

ஆட்சியில் பங்கு – தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது!

சென்னை, பிப். 12– சென்னையில் ‘இந்தியா டுடே’ சார்பில் நடைபெற்ற ‘Tamil Nadu Round Table’ நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு பேட்டியளிக்கையில் “தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக உள்ளது என்றும், “ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது” என்றும், ‘‘பெரியாருடைய கொள்கை + அண்ணா வுடைய இலட்சியம் + கலைஞருடைய பாதை = ‘திராவிட மாடல்’ ஆட்சி’’ என்றும் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (11.2.2026) சென்னையில், INDIA TODAY சார்பில் நடைபெற்ற TAMIL NADU ROUND TABLE நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அளித்த பேட்டி வருமாறு:

செய்தியாளர்: Confidence is coming from the schemes that you have brought in place, the welfare schemes, the fact that you said Tamil Nadu is now No.1 when it comes to growth rate. Is there a Dravidian Model 2.0 that you are bringing?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: Absolutely! No doubt!

செய்தியாளர்: கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்திய உங்களுடைய திட்டங்களைச் சொல்லி அதன் மூலமாக நீங்கள் வாக்குகளைக் கேட்கிறீர்களா?

மு.க.ஸ்டாலின்: Definitely. எங்கள் திட் டங்களை சொல்லித்தான் நாங்கள் வாக்குகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அனைத்துத் திட்டங்களும் முழு வதுமாக மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. அதனால், கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெறப் போகிறோம். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. 200–யும் தாண்டி வெற்றி பெறுவோம்!

செய்தியாளர்: Are you worried about your opponents at all? Who is your main opponent?

மு.க.ஸ்டாலின்: எத்தனை கூட்டணி வைத்தாலும் சரி, இந்த திமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியை எதிர்த்து வெற்றி பெற முடியாது. நாங்கள் எதிர்பார்ப்பது 200. அதையும் தாண்டித்தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

செய்தியாளர்: 2021 தேர்தலை விட இந்தத் தேர்தல் மிகக் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

மு.க.ஸ்டாலின்: இல்லை, கண்டிப்பாக ஸ்வீப் செய்யப் போகிறோம். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.

செய்தியாளர்: You are saying you will do better in 2026 than you did in 2021?

மு.க.ஸ்டாலின்: 2021இல் செய்யப் போகிறோம் என்று சொல்லி வாக்கு கேட்டு வந்தோம். நிறைய சாத னைகளை தற்போது செய்திருக்கிறோம். செய்திருப்பதை சொல்லி இப்போது ஓட்டு கேட்கப் போகிறோம். அதனால், கண்டிப்பாக அதைவிட அதிகமாக தான் வாக்குகள் பெறுவோம்.

கலைஞரிடம் கற்றுக் கொண்டது
உழைப்பு, உழைப்பு, உழைப்பு!

செய்தியாளர்: கலைஞர் மற்றும் துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைப்பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? தந்தையிடம் கற்றுக்கொண்டது என்ன? உங்கள் மகனிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

மு.க.ஸ்டாலின்: கலைஞரிடம் கற்றுக் கொண்டது உழைப்பு, உழைப்பு, உழைப்பு. அவரிடம் இருந்து பல வற்றைக் கற்றுக் கொள்ள முடியும். உழைப்பை மட்டும் அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். அந்த உழைப்புத்தான் என்னுடைய மகன் உதயநிதிக்கும் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்படித்தான் வர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

செய்தியாளர்: ஒரு நல்ல பொலிட்டிஷியனாக இருக்க வேண்டும் என்றால் கடின உழைப்பு மட்டும் தான் வேண்டுமா?

மு.க.ஸ்டாலின்:நிச்சயம் உழைப்புதான். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. எதை யும் எதிர்பார்க்காமல் உழைத்தால்தான் அரசியலில் முன்னுக்கு வர முடியும். எதையா வது எதிர்பார்த்து அரசியலுக்கு வந்து உழைத்தோம் என்றால் முடியாது. யார் காலிலாவது விழுந்து அதனால் முன்னுக்கு வருவது என்பது நடக்காது. உழைத்தால்தான் முன்னுக்கு வர முடியும். அப்படி உழைத்துத் தான் நான் வந்திருக்கிறேன்.

செய்தியாளர்: திராவிடக் கொள்கை உங்கள் அரசி யலுக்கு எவ்வளவு முக்கியம் என்று நினைக்கிறீர்கள்?

மு.க.ஸ்டாலின்: பெரியாருடைய கொள்கை, அதைத் தொடர்ந்து அண்ணாவுடைய இலட்சியம், கலைஞருடைய பாதை, இது தான் எனக்கு முக்கியம். அதனால், ‘திராவிட மாடல்’ ஆட்சியை நாங்கள் நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

செய்தியாளர்: ராகுல்காந்தி அவர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், உங்களுக்குமான உறவு குறித்து?

மு.க.ஸ்டாலின்: ராகுலைப் பொறுத்தவரைக்கும் அரசியலைத் தாண்டி, ஒரு மூத்த சகோதரராக என்னைப் பார்க்கிறார். நானும் அவரை சகோதரராகத்தான் பார்க்கி றேன். அரசியலைத்தாண்டி சொல்கிறேன். குடும்பத்தில் ஒருவர் போன்று என்னை அவர் கருதுகிறார். நானும் அப்படித்தான் கருதுகிறேன்.

செய்தியாளர்: தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக இந்தத் தேர்தலில் இருக்குமா?

மு.க.ஸ்டாலின்: நிச்சயமாக இருக்கும். மற்றவர்கள் நினைப்பது போன்று இல்லை. உங்களைப் போன்ற மீடியாக்கள் செய்யும் பிம்பங்கள் அது. நாங்கள் நன்றாக இருக்கிறோம்.

கூட்டணியில் முறிவு ஏற்படுத்த சதி!

செய்தியாளர்: ஆட்சியில் பங்கு குறித்து…

மு.க.ஸ்டாலின்: அது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்பது எங்களுக்கும் தெரியும். அவர்களுக்கும் தெரியும். அது இடையில் சில பேர் கிளப்பிவிடும் பிரச்சினை. கூட்டணியில் ஏதேனும் முறிவு ஏற்படுமா.. என்று திட்ட மிட்டு சதி செய்கிறார்கள். அதைப்பற்றி நாங்களும் கவலைப்படவில்லை. அவரும் கவலைப் படவில்லை.

நிதி வரவில்லையென்றாலும்
முதலிடத்தில் தமிழ்நாடு!

செய்தியாளர்: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நீங்கள் எப்போதும் ஆதரவாக இருந்திருக்கிறீர்கள். ஒன்றிய அரசிடமிருந்து உங்களுக்கு வரவேண்டிய நிதிகள் ஏதும் வரப்பெறவில்லையே? அது குறித்து?

மு.க.ஸ்டாலின்: நிதி வரவில்லையென்றா லும் அதைச் சமாளித்து தமிழ்நாடு இன்றைக்கு முதலிடத்திற்கு வந்திருக்கும் அளவிற்கு சூழலை உருவாக்கியிருக்கிறோம். அதற்காகப் போராடுகிறோம். வாதாடுகிறோம். போராட்டங்கள் நடத்துகிறோம். ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறோம். நாளை (12.2.2026) கூட இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்த இருக்கிறோம். அதனால், எங்களுடைய கோரிக்கை களை தொடர்ந்து சொல்லிக் கொண்டுதான் இருப்போம். அதற்காக எங்களுடைய பணிகளை விட்டு விடமாட்டோம். அதையும் வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறோம். அதுதான் எங்களுடைய திறமை. எங்கள் ஆட்சியின் திறமை.

செய்தியாளர்: ஒன்றிய அரசிற்கும் – பிரதமர் மோடி அவர்களுக்கும் – உங்களுக்குமான உறவு குறித்து?

மு.க.ஸ்டாலின்: தலைவர் கலைஞர் அவர்கள் பலமுறை சொல்லியிருக்கிறார். உரிமைக்குக் குரல் கொடுப்போம். உறவுக்குக் கை கொடுப்போம். அந்த பாலிசி தான் எங்களுக்கு உண்டு.

செய்தியாளர்: Thank you so much for joining us. Please give a warm round of applause to the Chief Minister.

மு.க.ஸ்டாலின்:Thank you.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி யளித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *