சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு ரூ.8 கோடியில் இதய சிகிச்சைக்கான நவீன கேத்லேப் கருவி அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப். 11- அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் நேற்று (10.2.2026) ரூ.8 கோடியிலான புதிய கேத்லேப் கருவியை மக்கள் பயன்பாட்டுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

நவீன கருவி

பின்னர், அமைச்சர் கூறியதாவது: உலகம் முழுவதும் இதய நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவ மனையில் 2 கேத்லேப், அதாவது, 2 இருதய வடிகுழாய் ஆய்வகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

அதேபோல், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 கேத்லேப், சென்னை பெரியார் அரசு மருத்துவமனையில் 1 கேத்லேப், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1 கேத்லேப் அமைக்கப்பட்டது.

அந்த வகையில், இந்த மருத்துவமனையையும் சேர்த்து இதுவரை 7 கேத்லேப் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. விரைவில் கடலூர், நீலகிரி, திருவள்ளுர், திருவண்ணாமலை, ராமநாதபுரம் ஆகிய 5 இடங்களில் புதிய கேத்லேப் அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு அடைப்புகளை உடனடியாக அகற்றி ரத்த ஓட்டத்தை சீராக்க கேத்லேப் கருவி உதவுகிறது.

ரூ.8 கோடியில் கேத்லேப் கருவி

இதய பாதிப்பு உள்ளானவர் களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் இதயநாள அடைப்பு களை அகற்றுவதற்கும், இதய துடிப்பு குறைபாடுகளுக்கான சிகிச்சைக்கும் கேத்லேப் பயன்படுகிறது.

ஏற்கெனவே, இந்த மருத்துவ மனையில் கேத்லேப் கருவி ஒன்று பயன்பாட்டில் இருந்தாலும், நாள்தோறும் அதிகம் பேர் இதய சிகிச்சைக்கு வருவதால் இன்னொரு கேத்லேப் கருவி ரூ.8 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் கேத்லேப் சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் வரை செலவாகும். இந்த மருத்துவ மனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது.

மதுரை எய்ம்ஸ்: மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முடியும் தருவாயில் இருப்பதாக சொல்ல முடியாது. முழுமையாக பணிகள் முடிவடைவதற்கு 2028ஆம் ஆண்டு இறுதியாகும். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர் சேர்க்கைக்கு முதலமைச்சர் ஒத்துழைப்பு தந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர்களை சேர்க்க வைத்து வகுப்பு நடத்தப் பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் 50 மாணவர்கள் என்ற வகையில் கடந்த 4 ஆண்டுகளாக அம்மாணவர்கள் மாநில அரசு மருத்துவக் கல்லூரியில் தான் படித்து வருகிறார்கள். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை பார்க்காமலேயே, மருத்துவ கல்லூரி படிப்பை முடித்து வெளியில் செல்பவர்களாக அவர்களது நிலை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வின் போது, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் மணி, இதயவியல் துறை தலைவர் செசிலி மேரி மெஜில்லா ஆகியோர் உடன் இருந்தனர்.

பாதி வேகவைத்த கோழி இறைச்சியை உண்ண வேண்டாம்!

பறவைக் காய்ச்சல் தொடர்பாக மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடுசுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

காகங்களோ, கோழி போன்ற பறவைகளோ திடீரென்று காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இறந்ததை பார்த்தால், உடனடியாக அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, ஆழமான குழியில் புதைக்க வேண்டும். கோழி போன்றவை திடீரென இறந்துபோனால், இறந்த கோழியை யாரும் சாப்பிடக் கூடாது. மேலும் கோழி இறைச்சியை உண்பவர்கள், நன்றாக சமைத்த பின்பே அதை உண்ண வேண்டும். பாதி வேக வைத்த இறைச்சியை உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மாவட்ட அளவிலான சுகாதார அலுவலர்கள் இந்த அறிவுறுத்தல்களை அந்ததந்த பகுதிகளில் வழங்கி வருகிறார்கள். கடந்த 9ஆம் தேதி தலைமைச் செயலர் அனைத்து அலுவலர்களுடன் கூட்டத்தை நடத்தி, இதுகுறித்து ஆய்வு செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சலால் மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனாலும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *