தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் 400க்கு மேல் நிறைவேற்றம்! கனிமொழி எம்.பி. தகவல்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ராமநாதபுரம், பிப். 11- “கடந்த தேர்தலின்போது தி.மு.க. அளித்த 505 வாக்குறுதிகளில் 400-க்கும் மேற்பட்டவை நிறைவேற்றப்பட்டுள்ளது” என மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் நேற்று திமுக துணை பொதுச் செயலர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வரவேற்றார். இதில் அமைச்சர் பெரியகருப்பன், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள் செ.முருகேசன், தமிழரசி, முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, அன்வர்ராஜா, சுந்தர்ராஜன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மீனவ அமைப்புகள், நெசவாளர், தொழில் துறை அமைப்பினர், மிளகாய் வத்தல் வணிகள் சங்கங்கள், முஸ்லிம் ஜமாத்தார்கள், இந்து, கிறிஸ்தவ அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.

400க்கும் மேற்பட்டவை நிறைவேற்றம்

பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது: “பல்வேறு அமைப்பினரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவை தேர்தல் அறிக்கையில் கொண்டுவரப்படும். கடந்த தேர்தலின்போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 400-க்கும் மேற்பட்டவை திமுக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு சில வாக்குறுதிகள் ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் நிறைவேற்ற முடியாமல் போனது. சில பரிசீலனையில் உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடிப்படைத் தேவைகள், குறைபாடுகள், குறிப்பாக மீனவர் பிரச்சினையை குறித்த கோரிக்கைகளை வைத்துள்ளனர். அரசு ஊழியர்கள் அவர்களது கோரிக்கைகளை முன்வைத்து தேர்தலை மய்யமாகக் கொண்டு தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் தனிநபர்கள் எதையும் பேசலாம். திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே நல்ல உறவு உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமிதான் நாள்தோறும் பொய் பேசி வருகிறார்.” இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *