பல குடும்பங்களின் ‘தலையெழுத்தை’ தி.மு.க. அரசு மாற்றியுள்ளது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.11–- பல குடும்பங்களின் ‘தலையெழுத்தை’ திமுக அரசு மாற்றியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, நுங்கம்பாக்கம், கல்லூரி சாலை, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று (பிப். 10) பாராட்டு விழா நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது: “இந்தப் பாராட்டு விழா கூடுதல் பொறுப்பை எனக்கு தருகிறது.”

இந்தப் பாராட்டு விழா அன்பின் வெளிப்பாடு, நான் உங்களுக்கு செய்யவேண்டிய பொறுப்புணர்வு நிறையவுள்ளது. இன்னும் நிறைவேற்ற வேண்டிய சில கோரிக்கைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்றுவதற்கு மீண்டும் நாங்கள் ஆட்சியமைப்போம்.

நீங்கள் பேசியப் பேச்சை கேட்டால் கொஞ்சம்கூட சந்தேகம் இல்லை, மீதமுள்ள கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

‘புதுமைப் பெண்கள்’ திட்டத்தால் பெண்கள் உயர் கல்வியில் சேருவது 34% உயர்ந்துள்ளது. புதுமைப் பெண்கள் திட்டத்தால் நகர்ப்புற மாணவிகளைக் காட்டிலும் கிராமப்புற மாணவிகள் அதிகம் பயனடைந்துள்ளனர். பட்டப் படிப்போடு நிறுத்தாமல் ஆராய்ச்சிப் படிப்பு வரை பெண்கள் படிக்க வேண்டும். கல்விதான் பெண்களுக்கு சிறந்த அணிகலன். பெண்கள் முன்னேறினால் ஒரு தலைமுறையே முன்னேறும். வெற்றிக்கு குறுக்கு வழி கிடையாது, கடின உழைப்பு தேவை.

5 ஆண்டுகளில் பல குடும்பங்களின் ‘தலையெழுத்தை’ திமுக அரசு மாற்றியுள்ளது. தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி, தமிழ்நாட்டில் மட்டும்தான் செலுத்துப்படுகிறது. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *