செயலில் இறங்குக!
இன உணர்வும், பகுத்தறிவும் மிக்க திராவிட சமூகத்தின் தீரர்களான அருமை இளைஞர்களே, மாணவர்களே, தோழர்களே!
நேற்று (16.4.2023) ‘தினமலர்’ என்ற பார்ப்பன நாளேட்டின் வார இதழில் ‘அந்துமணி’ என்ற அக்கிரகார சிண்டு தனக்குத்தானே ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டு பதிலைப் போட்டிருக்கிறது!
கேள்வி: தி.க. வீரமணி சாதித்தது என்ன?
பதில்: தினமும் கருப்புச் சட்டை அணிந்து கொள்கிறாரே, அதுதான் அவர் சாதித்தது!
அந்த அக்கிரகார அபிஷ்டுகளுக்கு பொறிதட்டி புத்திவரும் வகையில் 10வரிகளில் சமூக வலைதளத்தில் ‘தினமலருக்கு’ இடித்துக்காட்டி, திருப்பி சாட்டையை சொடுக்குங்கள்!
#சாதனை சரித்திரம்_வீரமணி என்ற தொடர் குறியுடன் ‘சுருக்கமான சுருக்’ பதிலை கொடுத்து அக்கிரகார நச்சரவு பேனாவின் விஷப்பல்லைத் தட்டுங்கள்!
– ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,
மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்