இயற்கை வளங்களை அழிக்கத் துடிக்கிறது பா.ஜ.க. அதற்கு அடிமை அ.தி.மு.க. துணை போகிறது! அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுகை, பிப்.11- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி கீரமங்கலத்தில் நடந்த ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“இருமொழிக் கொள்கை இருக்கும் வரை அண்ணாவின் ஆட்சிதான் நடக்கும். பிரதமர் நாடாளுமன்ற அவைக்கு வருவதில்லை. நாடாளுமன்றம் கூடுவதாகச் சொன்னால் வெளிநாடு சுற்றுப்பயணம் கிளம்பிவிடுவார். ஆனால் அண்ணா புற்றுநோய் பாதிப்பிலும் கஞ்சியை கரைத்துக் குடித்துவிட்டு அவைக்குச் சென்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வார்.

பெரியாரின் சுயமரியாதைத் திருமணத்தை சட்டமாக்கினார். அண்ணா. 1969 பிப்ரவரி 9 இந்த நாளில் தான் தலைவர் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள். 30 ஆண்டுகள் பதவியில் உள்ள மோடியின் குஜராத்தில் கல்வி இல்லை. கல்விக்கூடங்கள் இல்லை. 15 ஆண்டுகள் முதலமைச்சர், இப்போது பிரதமர். சொந்த மாநில மக்களுக்கு கல்வி கொடுக்கக் கூடாது என்று உள்ளவர் தான் பிரதமர் மோடி. இந்தியாவில் உள்ள அந்தமானில் குழந்தைகள் படித்தாலும் இடஒதுக்கீடு கிடையாது. ஆனால் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு தான் நம் குழந்தைகளை உயர வைத்துள்ளது.

இயற்கை வாரம்

தப்பித்தவறி கூட பாஜக கூட்டணி கால் ஊன்றினால் நம் உரிமைகள் எல்லாம் பறிபோகும். நலிவுற்ற மக்களை முடக்கி உயர் ஜாதிக்காக கொண்டு வந்த இடஒதுக்கீட்டை எதிர்த்தவர் முதலமைச்சர். இந்த ஆட்சி தமிழர்களின் அடையாளம். நெடுவாசல் திட்டத்தை எடப்பாடி கண்டுகொள்ளவில்லை. ஆனால் தி.மு.க. தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் வந்து தி.மு.க. ஆட்சியில் திட்டம் முடக்கப்படும் என்றார். செய்தார். தமிழ்நாடு இயற்கை வளங்களை அழிக்க பா.ஜ.க. துடிக்கிறது அதற்கு அடிமை அதிமுக துணை போகிறது. ஆனால் ஒரு பிடி மண்ணைக்கூட தொடவிடாமல் விரட்டி அடிப்பார் மு.க.ஸ்டாலின்.

இதற்கு முன் தி.மு.க. – அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும். ஆனால், இனிமேல் பாசிச பாஜக வரத் துடிக்கிறது. அவர்கள் வந்தால் நாட்டைக் காப்பாற்ற முடியாது. இனத்தை அழிக்க, மொழியை அழிக்க வரும் பா.ஜ.க. வேண்டாம். பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட தராத பா.ஜ.க. கூட்டத்தை விரட்டி அடிப்போம்.”  இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *