திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பிரியாவிடை விழா

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருச்சி, பிப்.11- 06.02.2026 (வெள்ளிக்கிழமை) அன்று பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 2025-2026ஆம் கல்வியாண்டில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு 11ஆம் வகுப்பு மாணவிகளால் பிரியா விடை விழா வழங்கப்பட்டது. பள்ளியின் செயலர் வீ.அன்புராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படி தலைமையாசிரியை சு.பாக்கியலெட்சுமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு 11ஆம் வகுப்பு மாணவி வி.எஸ்.ஜனனி வரவேற்று உரை நிகழ்த்தினார். பின்பு மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் இப்பள்ளியில் பயின்ற மலரும் நினைவுகள் அடங்கிய ஒளிப்படங்களை திரையிட்டு மகிழ்ந்தனர். மாணவிகள் ஒவ்வொருவரும் பள்ளியில் பயின்ற அனுபவங்களை ஆனந்த கண்ணீராக வெளிப்படுத்தினர். பள்ளி தலைமையாசிரியர் மாணவியர்களின் எதிர்காலம், சவால்களை எதிர்கொண்டு எவ்வாறு சாதனை படைக்க வேண்டும் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்கூறி 12ஆம் வகுப்பு தேர்வை எதிர்கொள்ளும் மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். பின்பு இருபால் ஆசிரியர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பின்பு மாணவிகளுக்கு நினைவுப் பரிசுடன் (கைக்கடிகாரம்) கூடிய சிற்றூண்டி வழங்கப்பட்டது. 11ஆம் வகுப்பு மாணவி அ.சனா நன்றி நவில நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

இவ்விழாவினை பள்ளியின் இயற்பியல் ஆசிரியை எஸ்.சிந்துஐா மற்றும் 11ஆம் வகுப்பு மாணவிகளும் ஒருங்கிணைந்து நடத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *