சென்னை, ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் அய்.டி.அய் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 220 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை ஆவடியில் உள்ள போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் ஜூனியர் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 220 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 14.02.2026க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஜூனியர் டெக்னீசியன் காலியிடங்களின் எண்ணிக்கை: 220, ஆப்பரேட்டர் மெட்டீரியல் ஹேண்டலிங் எக்யூப்மென்ட் – 55, ரிக்கர் – 25, ஹீட் டிரீட்மென்ட் ஆப்பரேட்டர் – 8, பிட்டர் ஆட்டோ எலக்ட்ரிக் – 4, சேண்ட் & சாட் பிளாஸ்டர் – 6, மெஷினிஸ்ட் – 122.
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் அய்.டி.அய் படித்திருக்க வேண்டும். ஊதியம்: ரூ. 30,000
வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒன்றிய அரசு விதிகளின்படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு அய்.டி.அய், படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.avnl.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை நிரப்பி தேவையான ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Chief General Manager, Heavy Vehicles Factory, (A Unit of Armoured Vehicles Nigam Limited) Post Bag No. 01, HVF Estate, Avadi, Chennai – 600 054
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 14.02.2026
ஆவடி தொழிற்சாலை வேலை வாய்ப்பு; 220 காலியிடங்கள்
Leave a Comment
