கழகப் பொறுப்பாளர்கள் 17.4.2023 அன்று காலை, சென்னை – மயிலாப்பூர் இல்லத்தில் நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு அவர்களை சந்தித்தனர். தாம்பரத்தில் மே 7 ஆம் தேதி (7.5.2023) நடைபெறவுள்ள திராவிடர் தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர். மாநாட்டிற்கு வருவதாக அமைச்சர் ஒப்புதல் அளித்தார். மாநில திராவிடர் தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், கழக வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ. நாத்திகன், பொருளாளர் கூடுவாஞ்சேரி மா.ராசு, கி.ஏழுமலை, செம்பாக்கம் கு.வைத்தியலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.