தஞ்சை மாநில மாநாட்டிற்கு இரண்டு ஊர்திகளில் காரைக்குடி மாவட்டத் தோழர்கள் திரண்டு வர முடிவு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

காரைக்குடி, பிப். 10- பிப்ரவரி 21 அன்று தஞ்சையில் நடைபெற உள்ள திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கு காரைக்குடி மாவட்டத்திலிருந்து இரண்டு ஊர்திகளில் தோழர்கள் திரளாக பங்கேற்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு காரைக்குடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை காரைக்குடி குறள் அரங்கில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ம.கு. வைகறை தலைமை வகித்தார். மாவட்டக் காப்பாளர் சாமி திராவிடமணி, மாவட்டச் செயலாளர் சி. செல்வமணி, மாநகரத் தலைவர் ந. ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டத் துணைத் தலைவர் கொ. மணிவண்ணன் கடவுள் மறுப்பு கூறி வரவேற்புரையாற்றினார்.

மாவட்டக் காப்பாளர் சாமி திராவிடமணி தனது உரையில், தந்தை பெரியார் காலத்தில் தஞ்சையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாடுகளை நினைவூட்டி, இன்றைய மாநில மாநாட்டிலும் தோழர்கள் கட்டாயம் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் பலரும் தங்களது கருத்துகளை முன் வைத்தனர்.

நிறைவுரையாக மாவட்டத் தலைவர் ம.கு. வைகறை பேசுகையில், திராவிடர் கழகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும், இன் றைய தமிழ்நாட்டின் சவால்களை முன்னோக்கி உணர்ந்து திராவிடத் தின் திசைகாட்டியாக செயல்பட்டு வரும் தமிழர் தலைவர் ஆசிரியரின் அயராத தொண்டறத்தை எடுத்து ரைத்து, பிப்ரவரி 21 தஞ்சை மாநாட் டிற்கு பெருந்திரளாக பங்கேற்போம் என அழைப்பு விடுத்தார்.

மாவட்டத் துணைச் செயலாளர் பொறியாளர் இ.ப. பழனிவேல் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் ப.க. ஆலோசகர் சு. முழுமதி, தேவகோட்டை நகரத் தலைவர் வீ.. முருகப்பன், ப.க. மாவட்டத் துணைச் செயலாளர் இரா. முத்துலட்சுமி, தி.தொ.க. செயலாளர் சொ. சேகர், ஒ. சிறு வயல் ஆறு. பாஸ்கரன், செ. அன் பரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் சுயமரியாதை வீரர் நா. பள்ளிகொண்டான் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்தும்,

பிப்ரவரி 21 அன்று தஞ்சையில் நடைபெற உள்ள திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கு காரைக்குடி யிலிருந்து இரண்டு ஊர்திகளில் திரளாக பங்கேற்பது எனவும் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *