சென்னை, பிப். 10- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் நேற்று (09.02.2026) சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில், அரசு செவிலியர் பட்ட மளிப்பு விழாவில் கலந்து கொண்டு, செவிலிய மாணவ, மாணவியர் களுக்கு பட்டங்கள் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர்,
“தமிழ்நாட்டில் ஒரு இலட்சம் பிறப்புகளுக்கு மகப்பேறு இறப்பு விகிதம் என்பது இந்த அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு 90 என்று இருந்தது. அது தற்போது 39.5 ஆக குறைந்திருக்கிறது. மகப்பேறு இறப்பு விகிதம் பாதிக்கும் குறைந்து இருப்பது பெரிய அளவிலான சாதனையாக உள்ளது. இதில் செவிலியர்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமானது. அதேபோல் குழந்தை மரண விகிதம் பொருத்தவரை 1000 குழந்தை பிறப்புகளுக்கு 10.4 ஆக இந்த அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு வரை இருந்தது, தற்போது 7.7 ஆக உள்ளது என்று குறிப்பிட்டார்.
