கீழப்பாவூர், பிப். 10- தென்காசி மாவட்டம் கீழப்பாவூரை சார்ந்த தந்தை பெரியார் குருதி, விழி மற்றும் உடற்கொடை கழகத்தின் நிறுவனர் அய். இராமச்சந்திரனின் தந்தையாரும், மருத்துவர் உ.இரா.மானவீரனின் தாத்தாவுமான ஆ.அய்யங்கண்ணு அவர்கள் (வயது 89) 02.02.2026 அன்று காலை 5 மணியளவில் மறை வுற்றார்கள்!
அவர்களது இரு விழிகளும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டன!
மருத்துவ மாணவர்கள் உடற்கூரியலை (Anatomy) கற்றுணர்வதற்கு பயன்படும் விதமாக அவரது உடல் திருநெல் வேலி மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு கொடையாக வழங்கப் பட்டது!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது பாட்டியின் விழியும், உடலும் கொடையாக வழங்கப்பட்டது நினைவு கூறத்தக்கது!!
இருக்கும்போது குருதிக்கொடை செய்வோம்! இறக்கும் போது விழி & உடற் கொடை செய்வோம்!!
