திருவண்ணாமலை மாவட்டம், எஸ்.நாவல்பாக்கம் ஊரைச் சார்ந்த குமரேசன்-புவனேஸ்வரி ஆகியோரின் மகள் சங்கவியின் நான்காம் ஆண்டு பிறந்த நாள் (10.2.2026) மகிழ்வாக ரூ.2000 நன்கொடையாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கினர். வாழ்த்துகள்!
– – – – –
பட்டீஸ்வரம் சுயமரியாதைச் சுடரொளி க.அய்யாசாமி மற்றும் அவரது சகோதரர் க.சாமிநாதன் ஆகியோரது பிள்ளைகள் அ.இளவழகன் – பானுமதி, அ.கலாவதி – இராமநாதன், சா.செல்லையன் – வசந்தா, சா.சொக்கலிங்கம் – சந்திரா ஆகியோருக்கு அன்னை மணியம்மையார் தலைமையில் ஒரே மேடையில், ஒரே நாளில் (10.02.1976 – செவ்வாய்கிழமை) நடைபெற்ற நான்கு சுயமரியாதைத் திருமணங்களின் 50ஆவது ஆண்டு நிறைவையொட்டி மகிழும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவர்களது சார்பில் ரூ 2000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!
– – – – –
மா. புகழினி 10 ஆண்டு பிறந்த நாள் முன்னிட்டு இயக்க நிதியாக ரூ.1000த்தை கழகப் பொது செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார் (8.2.2026, ஒக்கநாடு மேலையூர்)
