ஏதாவது ஒரு கட்சி அதிகாரத்தில் – பதவியில் இருந்தால் அதற்குச் சினேகிதர்கள் ஏற்படுவதைவிட, அதிகமாக எதிரிகள் ஏற்படுவது சகஜமேயாகும். ஏனெனில் அந்த அதிகாரத்தைப் பற்றிப் பொறாமை கொண்ட மக்கள் ஒரு புறமும், அப்பதவி தங்களுக்குக் கிடைக்க முயற்சித்து ஏமாற்றமடைந்தவர்கள் ஒரு புறமும், அந்த அதிகாரத்தில் உள்ளவர்களால் பயன்பெற உத்தேசித்து ஏமாற்றமடைந்தவர்கள் ஒரு புறமும், இந்த நான்கு கூட்டத்தாருடைய கூலிகள் ஒரு புறமும், வேறு வகையில் பிழைக்க வகையற்று இப்படிப்பட்ட நிலைமையைப் பயன்படுத்தியே வாழ நினைத்திருப்பவர்கள் ஒரு புறமுமாக விரோத பாவத்தில் இருந்து – பதவியிலிருப்பவர்கள் என்ன நன்மை செய்திருந்தாலும் அதைப் பற்றிக் கவலை இல்லாமல் அவர்களுக்குத் தொல்லை விளைவிப்பது இயற்கையேயன்றி வேறென்னவாகும்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
