சென்னை, பிப். 10- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 12ஆம் தேதி பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டையில் இரயில்வே 2பி சந்திக்கடவில் ரூ.96.04 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தினை திறந்து வைக்க உள்ளார்.
இதனை முன்னிட்டு, முன்னேற்பாடுப் பணிகள் குறித்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டையில் இரயில்வே 2ஏ சந்திக்கடவில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள பாலத்திற்கு அடிக்கல் நாட்டுவதை முன்னிட்டு, முன்னேற்பாடுப் பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின்போது மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
