ஒன்றிய பிஜேபி அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து 12ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நாடு முழுவதும் 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பு

1 Min Read

சென்னை, பிப். 10- தமிழ்நாடு அய்என்டியுசி தலைவர் மு.பன்னீர்செல்வம் நேற்று (9.2.2026) வெளியிட்ட அறிக்கை:

தொழிலாளர் விரோத சட்டங்களை கொண்டுவந்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து 12 தொழிற்சங்கங்கள் பிப்ரவரி 12ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்தவேலைநிறுத்தப்போராட்டத்தில் 25 கோடி தொழிலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

தமிழ்நாடு அய்என்டியுசி நிர்வாகிகள், தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் திரளாக பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பைக் காட்டவேண்டும். சென்னை அண்ணா சாலை தபால் அலுவலகம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

மருத்துவ ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு

கணையப் புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி

மாட்ரிட், பிப்.10- ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி மரியானோ பர்பசிட் தலைமையிலான மருத்துவக் குழு,அபாயகரமான புற்றுநோய்களில் ஒன்றாகக் கருதப்படும் கணையப் புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்தும் முறையை எலிகளிடத்தில் சோதித்து வெற்றி கண்டுள்ளது.

கணையப் புற்றுநோய் பெரும்பாலும் கேஆர்ஏஎஸ் (KRAS) எனும் குறைபாடான மரபணுவால் ஏற்படுகிறது. புற்றுநோய்க்கட்டிகளை ஏற்படுத்தும் அதன் பரவலைத் தடுத்து நிறுத்தும் தரக்ஸனரசிப், அபாடினிப், எஸ்டி36 ஆகிய மூன்று மருந்துகளை ஒரேநேரத்தில் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இப்பரிசோதனையில் புற்றுநோய்க்கட்டிகள் குணமானது கண்டறியப்பட்டது.

மேலும்,சிகிச்சை நிறுத்தப்பட்டு 200 நாள்களுக்குப் பிறகும் சோதனை எலிகளிடம் மீண்டும் புற்றுநோய்க் கட்டிகள் உருவாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட் டுள்ளதால், இந்த ஆய்வு பன்னாட்டு மருத்துவ உலகத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *