சென்னை, பிப்.10 தமிழியக்கம் – பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் மற்றும் உலகளாவிய தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் 91 ஆம் அகவை புகழ் வணக்கம் படத்திறப்பு விழா நிகழ்வு நேற்று (9.2.2026) மாலை 5.30 மணிக்குசென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் தமிழியக்கத் தலைவர் வி.அய்.டி வேந்தர் கல்விக்கோ கோ.விசுவநாதன் தலைமையில், திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தின் தொடக்கமாக தமிழ்மொழி வாழ்த்தினை கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன் பாடினார். நிகழ்விற்கு வருகைத் தந்திருந்த அனைவரையும் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்றார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் படத்தினை திறந்து வைத்து புகழ் வணக்க உரை நிகழ்த்தினார். ஆசிரியரின் புகழ் வணக்க உரைக்கு முன்பாக பெருங்கவிக்கோவின் நினைவு மலரினை ஆசிரியர் உள்ளிட்டோருடன் செவாலியே டாக்டர் வி.ஜி.சந்தோசம் வெளியிட வி.அய்.டி.வேந்தர் கல்விக்கோ கோ.விசுவநாதன் பெற்றுக் கொண்டார்.
மதிமுகவின் வெளியீட்டுப் பிரிவு செயலாளர் ஆ.வந்தியத்தேவன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.எம்.இதயதுல்லா, பொன்.மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள். இறுதியாக பேராசிரியர் வா.மு.சே .ஆண்டவர் நன்றி கூறினார்.
கூட்டத்தில் கவிச்சிங்கம் கண்மதியன், வழக்குரைஞர் சிவக்குமார்,
த.கு. திவாகரன், புலவர் பழ..தமிழாளன் , திராவிடர் கழக செயலவைத் தலைவர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர் செல்வம், திராவிடர் கழக கிராமப்புற பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி.க.அன்பழகன், மாநில மகளிரணி துணைச் செயலாளர் வி.கே.ஆர்.பெரியார் செல்வி, பெரியார் இயக்கச் சிந்தனையாளர் வாலாசா வல்லவன், கவிஞர் இரவிபாரதி, புலவர் வெற்றியழகன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.
