சென்னை. ஏப். 18- சென்னை புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் செயல் பட்டு வரும் ரப்பானியா அரபு கல்லூரியில் அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் மசூதியை அகற்றக் கோரிய வழக்கை 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தில், திருப்பூரைச் சேர்ந்த வழக்குரைஞரும், இந்து முன்னேற்ற கழகத் தலை வருமான கோபிநாத் தாக்கல் செய்த மனு வில், “சென்னை புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் செயல்பட்டு வரும் ரப்பானியா அரபு கல்லூரியில், மாநகராட்சியின் அனுமதியின்றி மசூதி கட்டப்பட்டு வருகிறது.
ஒரு மத வழிபாட்டுத் தலத் துக்கு அருகில் மற்றொரு மத வழிபாட்டுத்தலம் கட்டுவதை தடை செய்ய வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி வேணுகோ பால் பரிந்துரைத்துள்ளார். ஆனால், அரபி கல்லூரியில் இருந்து நூறு மீட்டர் தூரத்தில் 400 ஆண்டு பழமையான சிவன் கோயில் உள்ளது. எனவே, அரபி கல்லூரியில் மேற்கொள் ளப்பட்டுள்ள மசூதி கட்டுமா னங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந் தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகி யோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப் போது அரசு பிளீடர் பி. முத்துக்குமார் ஆஜராகி, “கல்லூரி வளாகத்தில் வழிபாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் மசூதி கட்டப்படுகிறது. திருப்பூரை அடிப்படையாக கொண்ட மனுதாரர் சென்னை யில் மசூதி கட்டப்படுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளதில் வேறு ஏதோ உள் நோக்கம் இருப்பதாக தெரிகிறது. எனவே, இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இதுபோன்ற வழக்குகளைத் தொடர மனுதாரருக்கு தடைவிதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பொதுநல நோக்குடன் இந்த வழக்கு தொட ரப்பட வில்லை எனக் கூறி, 25 ஆயிரம் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.