கேள்வி: கருணாநிதியின் பேனா கல்கியின் பேனா ஒப்பிடவும்.
பதில்: கல்கியின் பேனா எழுத படிக்கப் பயன்படும்; கருணாநிதியின் பேனா வேடிக்கை பார்க்க மட்டுமே பயன்படும்.
‘துக்ளக்’, 26.4.2023
அப்படியா! சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் ‘சக்கரவர்த்தி திருமகன்’ நூலுக்கு கலைஞரின் ‘சக்கரவர்த்தியின் திருமகன்’ நூல் கொடுத்த சவுக்கடி பற்றி குருமூர்த்தி பூணூல்களுக்குத் தெரியுமா?
குருமூர்த்திக்கு
சோவின் பதிலடி
கேள்வி: ஆன்மிகத்திற்கும் மனிதநேயத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
பதில்: ஆன்மிகம் கலக்காத மனிதநேயம்; அரசியல் கலந்த சமூகநீதி போலத்தான்.
– இன்றைய ‘துக்ளக்’கில்
குருமூர்த்தியின் பதில்
சோவின் பதிலடி இதோ:
கேள்வி: அரசியல்வாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்; ஆன்மிகவாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்; நடிகர் ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்?
சோவின் பதில்: அரசியல்வாதி ஆவதற்குப் பொய் சொல்லத் தெரியவேண்டும்; ஆன்மிக வாதி ஆவதற்குப் பொய்யை அருள்வாக்காக மாற்றத் தெரிந்திருக்கவேண்டும்; நடிகர் ஆவ தற்கு உண்மையிலேயே நடிக்கத் தெரிய வேண்டும்.
‘துக்ளக்’, 26.10.2016, பக்கம் 23
என்ன குருமூர்த்தியாரே, உங்கள் குருநாதர் சோ கொடுத்த அடி சுளீரென்று உரைக்கவில்லையா? ஆன்மிக யோக்கியதை யின் தோலைப் பட்டை கழற்றியுள்ளாரே உங்கள் குருநாதர்! உங்கள் தோலுக்கு எங்கே உரைக்கப் போகிறது?