முதுகலை மருத்துவம் படிக்க விரும்புபவர்களுக்கு தனித்துவமான ஆப் அறிமுகம்!

Viduthalai
1 Min Read

சென்னை, ஏப். 18- மருத்துவப் பயிற்சி மய்யங்களில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாகிய ஆலன் முது கலை மருத்துவ மாணவர்களுக்கு வழங்குவதற்காக ஆலன் நெக்ஸ்ட் என்கிற அதிநவீன மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்துகிறது. தற்போது சந்தையில் உள்ள பிற தேர்வுத் தயாரிப்பு தளங்களில் இருந்து வேறுபட்டு, தனித் துவமான அம்சங்கள், பாடங்களுக்கான ஆதாரங்களை இந்த ஆப் வழங்குகிறது.

இது குறித்து ஆலன் நெக்ஸ்ட் வெர்டிகல், நிறுவன செயல் அலுவலர் அமன் மகேஸ்வரி கூறுகையில்:- “மாணவர்களின் பரபரப்பான வேலை அட்டவணையை தொந்தரவு செய்யாமல், மருத்துவ முதுகலை நுழைவுத் தேர்வுத் தயாரிப்பு நடைமுறையை எளிமையாகவும் எளிதில் அணுகக்கூடிய ஒன்றாகவும் மாற்றுவதே ஆலன் நெக்ஸ்ட் மொபைல் ஆப்பின் குறிக்கோள். போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவதற்கான செயல் திட் டத்தை அளிப்பதன் மூலம், முதுகலை மருத்துவ மாணவர் களின் கல்வி மற்றும் தொழில்முறை இலக்குகளை அடைய உதவுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள் ளோம்” என்றார்.

பல பாட ஆதாரங்களைத் தேடுவதற்கான தேவையை இந்த ஆப் நீக்குகிறது. அத்துடன் பிரத்யேக முன்னணி ஆசிரியர்களிடமிருந்து சமீபத்திய மாற்றங்களுடன் கூடிய, சுருக்கமான  பாடங்களை வழங்குகிறது. ஆல்பா, பீட்டா மற்றும் டெல்டா என்கிற மூன்று விரிவான பாடத் தொகுப்புகள் மாணவர்களின் பல்வேறுபட்ட தேவை களைப் பூர்த்திசெய்யும் அதே வேளையில், அவர்களின் தயாரிப்புகளுக்கான சிறந்த பாட ஆதாரங்களை எளிதாக அணுகுவதையும் உறுதிப்படுத்துகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *