மதுரை சே.முத்துச்சரம் மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் அவர்களின் தாயாரும், தமிழ்நாடு ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் மு.சேவுகபாண்டியன் மனைவியுமான சே.முத்துச்சரம் அவர்கள் இயற்கை எய்தினார். திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வம், மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், மாவட்ட செயலாளர் இராலீ.சுரேஷ் மாவட்ட துணை தலைவர் நா.முருகேசன், பக அமைப்பாளர் பா.சடகோபன் கழக பேச்சாளர் அ.வேல்முருகன்,கிளைகழக செயலாளர் இரா.அழகுப்பாண்டி ஆகியோர் மறைந்த தாயார் அவர்களுக்கு மாலை அணிவித்து சே.பசும்பொன் பாண்டியன் அவர்களிடம் இரங்கல் தெரிவித்தனர்.

 

குத்தாலம் சின்னப்பிள்ளை மறைவு
கழகத் தோழர்கள் மாலை வைத்து மரியாதை

மறைவு

திராவிட முன்னேற்ற கழக உயர் மட்ட செயல் திட்ட உறுப்பினரும், மேனாள் சட்ட மன்ற உறுப்பினருமாகிய குத்தாலம் பி.கல்யாணம் அவர்களின் இளைய சகோதரர் சின்னப்பிள்ளை (எ) சந்திரசேகரன் 3.2.2026 அன்று இயற்கையெய்தினார். அன்னாரது உடலுக்கு 04.02.2026 காலை 10.30 மணியளவில் மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன். கழக காப்பாளர் சா. முருகையன், கி.தளபதிராஜ்,  மாவட்டச் செயலாளர் கு. இளமாறன், மாவட்ட துணைத்தலைவர் ஞான. வள்ளுவன், மயிலாடுதுறை நகரத் தலைவர் சீனி.முத்து, நகர செயலாளர் பூ.சி.காமராஜ், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் அ.சாமிதுரை பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் இரெ.செல்லதுரை குத்தாலம் ஒன்றிய விவசாய அணிச்செயலாளர் கு.இளஞ்செழியன், மாவட்ட  இளைஞரணி தலைவர் க.அருள்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *