பிப்ரவரி 17இல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் சட்டப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு அறிவிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.8 தமிழ் நாட்டில் இடைக்கால பட் ஜெட்  பிப்ரவரி 17ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப் பேரவைத் தலைவர்  மு. அப்பாவு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைமைச் செயலகம் 7.2.2026 அன்று வெளியிட்ட அறிவிப்பில், “சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை, 2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 17-ஆம் நாள், காலை 9.30 மணிக்கு, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார்.

மேலும், 2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 17-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு, 2026-2027-ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்.

2026-2027-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் 2025-2026-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியன 2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 20-ஆம் நாள், வெள்ளிக்கிழமை அன்று பேரவைக்கு அளிக்கப்பெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, “இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை சட்டமன்ற கூட்டம் தொடங்கும் நாளுக்கு முந்தைய நாள் அதாவது 16ஆம் தேதி அலுவல் ஆய்வுக் குழு எனது தலைமையில் கூட்டப்பட்டு முடிவு செய்யப்படும். சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி கூட்டத்தொடர் என்பதால் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயக் கடன்கள் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி பற்றிஅறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *