ஜப்பானில் சிக்கிய பேருரு வைரஸ்… குளத்தில் கண்டறியப்பட்ட ‘உஷிகுவைரஸ்’ விஞ்ஞானிகள் மிரட்சி!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டோக்கியோ, பிப்.8- உயிரினங்களின் தோற்ற ரகசியத்தை உடைக்கும் ஜப்பானின் உஷிகுவைரஸை, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த புதிய வைரஸ், மனிதர்கள் மற்றும் பலசெல் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக்கு வைரஸ்கள் எப்படி உதவின என்பதை விளக்குகிறது.

உஷிகுவைரஸ்

ஜப்பான் விஞ்ஞானிகள் இதுவரை அறியப்படாத புதிய “பெரிய வைரஸை” (Giant Virus) கண்டறிந்துள்ளனர். இது வைரஸ்களின் வியப்பான உலகத்தைப் புரிந்துகொள்ள உதவுவதோடு மட்டுமல்லாமல், பூமியில் பலசெல் உயிரினங்கள் எப்படித் தோன்றின என்ற அறியப்படாத செய்திகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

டோக்கியோவிற்கு அருகிலுள்ள இபராக்கி மாகாணத்தில் உள்ள ‘உஷிகு-னுமா’ என்ற நன்னீர் குளத்தில் ஒருவகை அமீபாவைத் தாக்கி வளர்ந்த இந்த வைரஸை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அந்த குளத்தின் பெயரால் இதற்கு உஷிகுவைரஸ் (Ushikuvirus) என்று பெயரிடப்பட்டுள்ளது. பொதுவாக வைரஸ்கள் மிகச் சிறியவை. ஆனால், இவை அளவில் மிகப் பெரியவை என்பதால், கடந்த நூற்றாண்டில் இவை பாக்டீரியாக்கள் என்று தவறாகக் கருதப்பட்டன. அண்மைக்காலமாகவே இவை உலகெங்கும் நிறைந்துள்ளன என்பதை நாம் உணர்ந்து வருகிறோம்.

வைரஸ்கள் உயிருள்ளவையா அல்லது உயிரற்றவையா என்பதில் இன்றும் அறிவியலில் குழப்பம் உள்ளது. இருப்பினும், இவை மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றன. மனித மரபணுவில் (Genome) சுமார் 8 சதவீதம் பழங்கால வைரஸ்களின் எச்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கண்டுபிடிப்பின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், பலசெல் உயிரினங்களின் செல்களில் காணப்படும் ‘உட்கரு’ (Nucleus), பழங்கால வைரஸ்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற கோட்பாடுதான்.

வைரல் யூகாரியோஜெனெசிஸ் (Viral Eukaryogenesis), 2001ஆம் ஆண்டு டோக்கியோ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியலாளர் மசாஹாரு டகமுரா ஒரு கோட்பாட்டை முன்வைத்தார். அதன்படி, ஒரு பழங்கால ஒற்றைசெல் உயிரினத்திற்குள் புகுந்த பெரிய டி.என்.ஏ (DNA) வைரஸ், அங்கேயே தங்கி அந்த செல்லின் அங்கமாக (உட்கருவாக) மாறியிருக்கலாம் என்று அவர் கூறுகிறார். இந்த “உஷிகுவைரஸ்”, செல்லின் உட்கருவை அழித்துவிட்டு, அந்த இடத்தில் வைரஸ்களை உருவாக்கும் தொழிற்சாலையை அமைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதுவே உட்கரு உருவாக அடிப்படையாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்த வைரஸ் மற்ற பெரிய வைரஸ்களில் இருந்து வேறுபட்டது. இது தான் தாக்கும் அமீபா செல்களை வழக்கத்திற்கு மாறாக மிகப்பெரிய அளவில் வளரச் செய்கிறது. இதன் மேற்பரப்பில் தனித்துவமான கூர்முனைகளும் (Spikes) நார் போன்ற அமைப்புகளும் உள்ளன. இந்த ஆய்வறிக்கை புகழ்பெற்ற ‘ஜர்னல் ஆஃப் வைராலஜி’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *