நாகர்கோவில், பிப். 8- குமரிமாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதியில் தேநீர் கடைகளில் பகுத்தறிவு திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கி வைத்தார். காப்பாளர் ம.தயாளன், பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஞா.பிரான்சிஸ், துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், தொழிலாளரணி செயலர் க.யுவான்சு மாணவர் கழகத் தலைவர் பரத், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை தோழர்கள் மு.பால்மணி, சத்யாராணி, முகிலன் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர். தந்தை பெரியாருடைய கொள்கை நூல்கள், தூண்டறிக்கைகள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் நூல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன.
