குமாரபாளையம்,பிப்.8- நாமக்கல் மாவட்டம் அக்க்ஷயா அறக்கட்டளையின் சார்பாக நடத்தப்பட்ட தமிழ் கையெழுத்துப் பயிற்சி, ஆங்கிலக் கையெழுத்துப் பயிற்சி மற்றும் ஓவியப் போட்டிகளில் 147 மாணவர்கள் ஆர்வத்துடன் கற்பனை அறிவைத் தூண்டும் கலை இலக்கியப் போட்டிகளில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பான வெற்றி பெற்றுள்ளனர். எழுத்தழகிலும் படைப்பாற்றலிலும் தங்கள் திறமையை அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் மற்றும் பதக்கமும் வழங்கினர். வெற்றி பெற்ற மாணவர் களுக்கு கோப்பை, சான்றிதழும் மற்றும் பதக்கமும் வழங்கி சிறப்பித்தனர். மாணவர்களைப் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மனமாரப் பாராட்டினர். இவ்வெற்றி மாணவர்களின் தொடர் முயற்சிக்கும் முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டலுக்கும் கிடைத்த பெருமையாகும். மாணவர்களிடம் உள்ள அளவற்ற திறமைகளை வெளிக்கொண்டு வருவதே இப் போட்டிகளின் நோக்கமாகும்.
